| குணமாலையார் இலம்பகம் |
511 |
|
|
(இ - ள்.) சீர்தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து - சீருடைய கனகபதாகையும் மாலையும் கூடி ; வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கைக்காட்ட - கட்டப்பட்ட பொற்கழலணிந்த மைந்தர்களின் கையிலே அவற்றைக் காட்ட; மைந்தர் - அம் மைந்தர்கள்; ஏர்தங்கு சுண்ணம் - இவையிரண்டுமே அழகிய சுண்ணங்கள்; இவற்றின் நலம் வேண்டின் - இவற்றின் நன்மையைச் சிறப்புற அறிய விரும்பின்; வெம்போர்க் கார் தங்கு வண்கைக் கழல் - போரில் வல்ல, முகிலனைய கொடையுறு கையை உடைய, கழலணிந்த; சீவகன் காண்மின் என்றார் - சீவகனைக் கண்டு காட்டுவீராக என்றனர்.
|
|
|
(வி - ம்.) மாலை என்பதற்கேற்ப 'மல்லிகை' அடை கூறினார்.
|
|
|
மைந்தர் - ஈண்டு ஏதிலராகிய சில மைந்தர் என்றவாறு. ஏர்தங்கு சுண்ணம் என்றது இவை இரண்டுமே அழகிய சுண்ணங்களாகவே எமக்குத் தோன்றுகின்றன என்பதுபட நின்றது. இவற்று இன்நலம் எனக்கண்ணழித்து இவற்றின் அழகினையன்றி இனிமையின் நன்மையை நீங்கள் அறியவிரும்பின் எனப் பொருள் விரித்திடுக. வெம்போர்க்கை, வண்கை எனத் தனித்தனி கூட்டுக. சீவகற் காண்மின் என்றது சீவகனைக் கண்டு அவனுக்குக் காட்டி வினவுவீராக என்பது படநின்றது.
|
( 31 ) |
| 882 |
வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் |
| |
கேள்வி மைந்தர் |
| |
தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் |
| |
சூழ மற்றப் |
| |
பூண்மின்னு மார்பன் பொலிந்தாங்கிருந் |
| |
தான்வி சும்பிற் |
| |
கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் |
| |
தோற்ற மொத்தே. |
|
|
(இ - ள்.) வாள்மின்னு வண்கை வடிநூல் கடல் கேள்வி மைந்தர் - வாள் மின்னற்குக் காரணமான வளவிய கையினையும், தெளிந்த கடலனைய நூற்கேள்வியையும் உடைய தோழரும் தம்பியரும்; தாள் மின்னு வீங்கு கழலான் தனைச்சூழ - காலில்மின்னுமாறு கட்டிய கழலானாகிய தன்னைச் சூழ்ந்திருக்க; அப்பூண் மின்னும் மார்பன் - சீவகனாகிய அந்த அணிகலன் ஒளிரும் மார்பன்; விசும்பில் கோள்மின்னும் மீன் சூழ் - வானில், கோண்மீனும் விண்மீனும் சூழ்ந்த; குளிர் மாமதித் தோற்றம் ஒத்து ஆங்கு இருந்தான் - தண்ணிய பெரிய திங்களின் தோற்றம் போல அவ்விடத்திருந்தான்.
|
|
|
(வி - ம்.) 'வீக்கு கழல்' என்பது 'வீங்கு கழல்' என விகாரப்பட்டது. 'கழலான்' நந்தட்டன் எனவும், 'மார்பன்' சீவகன் எனவும்
|
|