பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 515 

கொள்ளத் தெளிவித்தால் அன்றி; நீங்கப் பெறாய், வளைத்தேன் என - போகப் பெறாய் ; நின்னைத் தடுத்தேன் என்று கனகபதாகை மேலும் வற்புறுத்த; கள்செய் கோதையினாய்!- தேன் துளிக்கும் மாலையினாய்!; கரிபோக்கினால் - சான்று விடுத்தால்; நெஞ்சில் தௌ்ளித் தெளிக எனச் செப்பினான் - உள்ளத்தே ஆராய்ந்து தெளிக என்று சீவகனும் கூறினான்.

 

   (வி - ம்.) போக்குதல், 'நூலாற் போக்குதல்' என்றாற்போல உணர்த்தன்மேற்று.

 

   வள்ளல் : விளி. கரி - சான்று.

( 39 )
890 கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு
மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை
நண்ணு தீஞ்சொ னவின்றபு ளாதியா
மண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள்.

   (இ - ள்.) அண்ணல் ! - பெருந்தகையே!; எண்ணின் - எண்ணினால்; கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் - கண்ணை உடைய மக்களினும் கண் இமையாதவர்களினும்; நின் சொல் இகந்து அறிவார் இலை - உன் சொல்லைக் கடந்தறிவார் இல்லை; நண்ணு தீஞ்சொல் நவின்றபுள் ஆதியா - (ஆதலின் அவர்களை ஒழிய) தம்மினத்தில் ஒன்றை ஒன்று அழைக்குஞ் சொல்லையறிந்து பயின்ற பறவைகள் முதலாக; நீக்கின அஃது - தெளிந்து இச் சுண்ணத்தை நீக்கின் அதனை; ஒட்டுவல் யான் என்றாள் - பொருந்துவேன் நான் என்றாள்.

 

   (வி - ம்.) கண்ணின் மாந்தர் என்றது இமைக்கும் கண்ணையுடைய மாந்தர் என்பதுபட நின்றது. இகத்தல் - கடத்தல்.

( 40 )
891 காவில் வாழ்பவர் நால்வ ருளார்கரி
போவர் பொன்னனை யாயெனக் கைதொழு
தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள்
கோவை நித்தில மென்முலைக் கொம்பன்றாள்.

   (இ - ள்.) பொன் அனையாய்! - திருவைப் போன்றவளே!; காவில் வாழ்பவர் நால்வர் உளார் - பொழிலில் வாழ்பவர் நால்வர் (பறவை யினத்தவர்) உளார்; கரி போவர் என - அவர்கள் சான்று வருவர் என்று சொல்ல; கோவை நித்திலம் மென்முலைக் கொம்பு அனாள் - முத்துமாலை அணிந்த மென்மையான முலையை உடைய பூங்கொம்பு போன்றவள் ; கைதொழுது எம்பெருமான் சொன்னவாறு ஏவல் என்றாள் - கைகூப்பி எம்மிறையே நீ கூறியவாறே யாம் இத்தன்மை ஆம் என்றாள்.