|
கண்ணும் மனமும்போன்று எங்கும் கடிதாக ஓடித் தட்டித்திரியும் சுரும்புகாள் மிஞிறுகாள் என்க. மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார். கண் சென்றுழிச் செல்கின்ற மனத்தொடே உவமித்தலின் இது நிரனிறை; இவை எல்லா மணத்திலும் செல்லும். மதுவுண்டு மகிழ்கின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும். (சீவக. 3033, 3034) சுரும்பு முதலியன கூறும் பாஷையைச் சீவகன் உணர்ந்திருத்தலின், அதனால் அவற்றை அழைத்தான் என்று கொள்க; விக்கிரமாதித்தன் எறும்பின் மொழியை அறிந்தான் என்று கதை கூறுகின்றமையின். 'தாதுண்தும்பி போது முரன் றாங்கு' (மதுரைக். 655) என்றும், 'இரங்கிசை மிஞிறொடு தும்பி தா தூத' (கலி. 33) என்றும் கூறுதலின், தும்பியது கிளையாம் இந் நான்கும் என்க. 'நண்டுந் தும்பியும் நான்கறிவினவே - பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல். மரபு 31) என்று தும்பிக்குச் செவியின் றெனவே, இவற்றிற்குஞ் செவியின்றாம் ஆதலின், வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று. இவை ஈண்டு வந்து கரிபோதலில்; கேள்வியில்லன வருதல் என்னை? என்பது கடா. அதற்கு விடை : ஆசிரியர் 'நண்டுந் தும்பியும்' என்று தும்பியைப் பின் வைத்தது, மேல்வருஞ் சூத்திரத்
|
|