பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 517 

தின், 'மாவும் மாக்களும் ஐயறி வென்ப' (தொல். மரபு. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற் கென்றுணர்க. இதனை, 'வாராததனால் வந்தது முடித்தல்' என்னுந் தந்திர வுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரை கூறிப் போந்தாம். (இதனால் நச்சினார்க்கினியர் இந் நூலுக்கு உரை செய்வதற்கு முன்னரே தொல்காப்பிய உரை செய்தாரென்பது தெளிவு) அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோர் உணர்ந்தன்றே, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த - தா துண்பறவை பேதுறல் அஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன்' (அகநா. 4) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக் கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்.

 

   இங்ஙனம் கூறாது தான்கற்ற விஞ்சையின் ஆணையாற் கேள்வியுணர்வு பிறப்பித்தான் எனின், அவை கரிபோத லாகாவாம், 'எண்ணின் நின்சொல் இகந்தறிவாரிலை' (சீவக. 890) என்றலின்.

 

   [இவ்வாறு நச்சினார்க்கினியர் வண்டுகடகுச் செவியுணர் பேற்ற முயல வேண்டுவதென்னை? காவியக் கற்பனை யெனல் சாலாதோ?]

( 42 )
893 சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமு
மாலை யென்னு மடமயில் சுண்ணமுஞ்
சால நல்லன தம்முளு மிக்கன
கோல மாகக்கொண் டுண்மி னெனச்சொன்னான்.

   (இ - ள்.) சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் - பொழில் மயில் போல்வாள் சுரமஞ்சரியின் சுண்ணமும்; மாலை என்னும் மடமயில் சுண்ணமும் - குணமாலை யென்னும் இளமயில் போல்வாளின் சுண்ணமும்; சால நல்லன - மிகவும் நல்லனவே; தம்முளும் மிக்கன - அவற்றினுள்ளும் சிறந்தவற்றை; கோலம் ஆகக் கொண்டு உண்மின் எனச் சொன்னான் - நல்லன என்றறிந்து கொண்டு உண்மின் எனச் சொன்னான்.

 

   (வி - ம்.) வெறாதிருத்ததற்கு இருவரையும் மயில் என்றான்.

 

   மஞ்ஞைபோல்பவளாகிய சுரமை எனக். சுரமை: சுரமஞ்சரி. மாலை: குணமாலை. கோலம் - அழகு ஈண்டு நன்மைப் பண்பின் மேனின்றது.

( 43 )
894 வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை
விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே.

   (இ - ள்.) வண்ணம் வார்சிலை வள்ளல் கொண்டு - (இங்ஙனம் கூறிய) அழகிய நீண்ட வில்லேந்திய சீவக வள்ளல் இரண்டையும் இரண்டு கையிலும் கொண்டு; ஆயிடை விண்ணில் தூவியிட்டான் - ஆங்கே வானிலே தூவிவிட்டான்; மங்கை சுரமைய