பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 519 

   (வி - ம்.) இவன் தெளிவித்த முறை இவற்கு வேட்கை நிகழ்வது கருத்தாகக் கூறினாள்; அது மேல், 'என் மனத்தின் உள்ளன' (சீவக. 2006) என்பதனான் உணர்க.

( 46 )

வேறு

 
897 சோலையஞ் சுரும்பிற் சுண்ணந்
  தேற்றிய தோன்ற றன்னை
வேலையம் படுத்த கண்ணார்
  தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற
  மழையிடிப் புண்டோர் நாக
மாலையத் தழுங்கி யாங்கு
  மஞ்சரி யவல முற்றாள்.

   (இ - ள்.) சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை - பொழிலின்கண் வாழும் அழகிய வண்டுகளாற் சுண்ணத்தைத் தெளிவித்த சீவகனை; வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி - வேலோ என்று ஐயப்படுத்தின கண்ணினர் தொழுது விரைந்து சென்று; மாலைக்கு வென்றி கூற - குணமாலைக்கு வெற்றி என்று சொல்ல; ம்ழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்து அழுங்கி ஆங்கு - முகிலிடியுண்டு ஒரு பாம்பு தானுறையும் இடத்தே வருந்தினாற்போல; மஞ்சரி அவலம் உற்றாள் - சுரமஞ்சரி வருத்தமடைந்தாள்.

 

   (வி - ம்.) தோன்றல் - சீவகன். தொழுதனர்- முற்றெச்சம். மாலை : குணமாலை. ஆலையம் - உறையுள். மஞ்சரி : சுரமஞ்சரி.

( 47 )

வேறு

 
898 திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட
பங்க யப்படு வொத்துளை பாவாய்
நங்கை யென்னொடு ரையாய்நனி யொல்லே
யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள்.

   (இ - ள்.) திங்கள் அம் கதிர் செற்று நங்கை உழக்கப்பட்ட - திங்களின் அழகிய கதிர் தாக்கிக் கலக்கமுற்ற; பங்கயப்படு ஒத்துஉளை பாவாய்! - தாமரை மடுவைப் போல வருந்தும் பாவையே! நங்கையே!, இங்கண் என்னொடு நனி ஒல்லே உரையாய் - இங்கு என்னொடு இனிமையாக முன்புபோல விரைந்து உரையாடுவாய்!; என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள் - என்று அவளடியிலே விழுந்து வேண்டினாள் குணமாலை.