| நாமகள் இலம்பகம் |
52 |
|
|
கணைய மரம். யானையுண்ணும் உணவு கவளம். மதிள் : மதில் என்பதன் போலி
|
( 52 ) |
| 82 |
சலசல மும்மதஞ் சொரியத் தத்தமுட் |
| |
கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு |
| |
மலைதிளைப் பனவென நாக மான்றபோர் |
| |
குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே. |
|
|
(இ - ள்.) இரு மலை திளைப்பன என - இரண்டு மலைகள் தம்மிற் போர் செய்வனபோல; சலசல மும்மதம் சொரிய - சலசல என்று மும்மதங்களும் பெய்ய; கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து - கொலைபுரியும் இரு கொம்புகளும் தைத்து மறையத் தாக்கி; நாகம் தத்தமுள் ஆன்ற போர் - களிறுகள் தமக்குள் பெரும்போர் புரிய; குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்த - வளைத்த நிலைபெற்ற களங்களும் அழகு நிறைந்தன.
|
( 53 ) |
| 83 |
முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப் |
| |
பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச் |
| |
சித்திரக் கிம்புரி வைரஞ் சோ்த்துந |
| |
ரொத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே. |
|
|
(இ - ள்.) முத்துஉடை வெண் மருப்பு ஈர்ந்து - முத்துக்களையுடைய வெள்ளிய கொம்புகளை அறுத்துக் (கூர்மையிட்டு); மொய்கொள - அவை வலிமை கொள்ளுமாறு இடும்; பத்தி மருங்கில் பல்வினைக் குயிற்றிய சித்திரக் கிம்புரி - பத்தி மருங்கிலே பல தொழில்களைச் செய்த அழகிய தந்தப்பூணில்; வைரம் சேர்த்துநர் ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்ட - வைரம் இடுவோர் தம்மிற் பொருந்தி வாழுந் தெருக்களும் ஒழுங்குடன் நீண்டிருந்தன.
|
|
|
(வி - ம்.) [பத்தியின்] : இன் : அசை.
|
|
|
இனி , கிம்புரி வைரம் - கோளகையுமாம் : ஆகுபெயர். கோளகை - யானைத் தந்தப்பூண்.
|
( 54 ) |
| 84 |
ஓடுதோ்ச் சாரிகை யுகுபொற் பூமியு |
| |
மாடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமும் |
| |
கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக் |
| |
கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே. |
|
|
(இ - ள்.) ஓடு தேர் சாரிகை உகுபொன் பூமியும் - ஓடும் தேரின் விரைவினாலே சிந்தும் பொன்னையுடைய தேரேறும் இடங்களும்; ஆடகம் ஆற்றும் தார்ப்புரவி வட்டமும் - பொன்னாலான தாரினையுடைய குதிரையேறும் இடங்களும்; கேடக
|
|