| குணமாலையார் இலம்பகம் |
520 |
|
|
(வி - ம்.) ஒத்துளை - ஒத்தாய் என்றுமாம்.
|
|
|
இயற்கையிலேயே தண்மையுடைய திங்களின் கதிர் தீங்கிலதாகவும் அக்கதிர் கண்டாற்றாது வருந்துதல் தாமரைக்கியல்பு. நின் வருத்தத்திற்குக் காரணம் என் வெறறியன்று, நீ காரணமின்றியே கலங்குகின்றனை என்பாள், இங்ஙனம் உவமை தேர்ந்து கூறினாள் எனக. பங்கயப்படு ஒத்துளை பாவாய் என்றாரேனும் படுவிற்பங்கயம் ஒத்து என்றல் கருத்தாகக் கொள்க; என்னை? திங்கட் கதிர்க்கு உளைவது தாமரையேயல்லது படுவன்மையான் என்க. படு - மடு.
|
( 48 ) |
| 899 |
மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென் |
| |
னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற் |
| |
றோற்று வந்தென் சிலம்படி கைதொழ |
| |
நோற்ப னோற்றனை நீயென வேகினாள். |
|
|
(இ - ள்.) மாற்றம் ஒன்று உரையாள் - சுரமஞ்சரி விடை ஏதும் கூறிலளாய்; மழை வள்ளல் - முகிலனைய கொடையாளியான சீவகன்; ஏற்ற என் சுண்ணத்தை - தகுதியான என்னுடைய சுண்ணத்தை; ஏற்புஇல என்ற சொல் - (நின்மேல் விருப்பினால்) தகுதியில்லாதன என்ற சொல் உட்பட; தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ - தோற்றுச் சொல்லி வந்து என் சிலம்பு புனைந்த அடிகளைக் கையாலே தொழுதற்கு; நோற்பல் - நோற்பேன்; நீ நோற்றனை என - நீ (முன்னரே) நோற்றனை என்ற குறிப்புடன் குணமாலையை நோக்கியவளாய்; ஏகினாள் - வறிதே சென்றாள்.
|
|
|
(வி - ம்.) இஃது உட்கோள். 'பெருமையும் உரனும் ஆடுஉ மேன' (தொல். களவு. 7) என்பதனால், தன் வேட்கை மறைத்தான். ”தீண்டிலேன் ஆயின் உய்யேன் - சீறடி பரவ வந்தேன் அருள்எனத் தொழுது சேர்ந்து” (சீவக. 2072) என மேற்கூறுதலின், ஈண்டுச் சொற்றேற்று அடிதொழ என்று கருதினாள். இக் கருத்து அங்ஙனம் முடிக்கின்ற ஊழால் இவட்கு நிகழ்ந்தது.
|
( 49 ) |
| 900 |
கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக் |
| |
கன்னி மாட மடையக் கடிமலர்க் |
| |
கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள் |
| |
கன்னிக் குற்றது கன்னியர் கூறினார். |
|
|
(இ - ள்.) கன்னி நீலக் கடிமலர்க் கண்கன்னி - புதிய நீலமாகிய, மணமுற்ற மலர்போலுங் கண்களையுடைய சுரமஞ்சரி; கன்னியர் சூழதரக் கன்னிமாநகர்க் கன்னிமாடம் அடைய - கன்னிப் பெண்கள் சூழ்ந்துவர அழிவற்ற பெரிய நகரிற் கன்னிமாடத்தைச் சேர்ந்தாளாக; நற்றாய்க்கு அவள் கன்னிக்கு உற்றது - அவள் நற்றாயான சுமதி காரணங் கேட்ட
|
|