| குணமாலையார் இலம்பகம் |
522 |
|
|
உண்ணலேன் என்று உரையாடினாள் - இனி உண்ணமாட்டேன் என்று கூறினாள்.
|
|
|
(வி - ம்.) மற்று : அசை.
|
|
|
நும்மகள் எண்ணம் விண்ணின் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் போன்று முற்றுப் பெறாததோர் எண்ணம் என்றவாறு.
|
|
|
கண்ணின் ஆடவர் என்றதற்கேற்பக் காதின் ஆடவர் சொல்லைக் கேட்பினும் என்றும் வருவித்துக் கூறுக.
|
( 52 ) |
| 903 |
இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை |
| |
தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா |
| |
டின்றே னாவிக்கோர் கூற்ற மெனநையா |
| |
நின்று நீலக்கண் ணித்திலஞ் சிந்தினாள். |
|
|
(இ - ள்.) இன்று நீர் விளையாட்டினுள் - இன்று நடந்த நீர்விளையாட்டிலே; ஏந்திழை - சுரமஞ்சரிக்கு; சுண்ணத்தில் தோன்றிய தொன்று வேறுபாடு - சுண்ணங் காரணமாக உண்டாகிய ஊழாலுண்டான வேற்றுமை; இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் - இப்போது என் உயிருக்கோர் காலனாயிற்று; என நையா நின்று - என்று கூறி வருந்தி நின்று; நீலக்கண் நித்திலம் சிந்தினாள் - நீலமலரனைய கண்களாலே முத்தனைய நீரைச் சிதறினாள்.
|
|
|
(வி - ம்.) ஏந்திழை : சுரமஞ்சரி. தொன்று - ஊழ்வினை. தொன்று வேறுபாடு எனக்கூட்டி ஊழினால் வந்த வேறுபாடு என்க. ஆவி - உயிர். நையா : செய்யாவென்னெச்சம். நீலம் - நீலமலர் : ஆகுபெயர். நித்திலம் - கண்ணீர்: உவம ஆகுபெயர்.
|
( 53 ) |
வேறு
|
|
| 904 |
பட்டதென் னங்கைக் கென்னப் |
| |
பாசிழைப் பசும்பொ னல்குன் |
| |
மட்டவிழ் கோதை சுண்ண |
| |
மாலையோ டிகலித் தோற்றாள் |
| |
கட்டவிழ் கண்ணி நம்பி |
| |
சீவகன் றிறத்திற் காய்ந்தா |
| |
ளட்டுந்தே னலங்கன் மார்ப |
| |
வதுபட்ட தறிமோ வென்றாள். |
|
|
(இ - ள்.) என் நங்கைக்குப் பட்டது என் என்ன - (அது கேட்ட குபேரதத்தன்) என் மகளுக்கு நேர்ந்தது யாது என்று வினவ; (நற்றாய்); தேன் அட்டும் அலங்கல் மார்ப! - தேன்
|
|