பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 523

சிந்தும் மாலை மார்பனே!; பாசிழைப் பரவை அல்குல் மட்டு அவிழ் கோதை - புத்தணி, யணிந்த பரந்த அல்குலையும் தேன் விரியும் மாலையையும் உடைய சுரமஞ்சரி; மாலையோடு இகலிச் சுண்ணம் தோற்றாள் - குணமாலையுடன் மாறுபட்டுச் சுண்ணத்தாலே தோற்றாள்; கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்திற் காய்ந்தாள் - முறுக்குடைந்த மலர்க் கண்ணி புனைந்த நம்பியாகிய சீவகனாலே ஆடவரை வெறுத்தாள்; அது பட்டது அறிமோ என்றாள் - அதுதான் நிகழ்ந்தது; அறிவாயாக என்று சுமதி கூறினாள்.

(வி - ம்.) அறிமோ : மோ : முன்னிலை அசை.

மாலை : குணமாலை. இகலிச் சுண்ணந்தோற்றாள் என்க. காய்தல் - வெறுத்தல்.

( 54 )
905 பள்ளிகொள் களிறு போலப்
  பரிவுவிட் டுயிர்த்தென் பாவை
யுள்ளிய பொருண்மற் றஃதே
  லோபெரி துவப்பக் கேட்டேன்
வள்ளிதழ்க் கோதை மற்று
  நகரொடுங் கடியு மேனும்
வெள்ளநீ ணிதியி னின்னே
  வேண்டிய விளைப்ப லென்றான்.

(இ - ள்.) பள்ளிகொள் களிறுபோல - துயில் கொள்ளும் யானைபோல; பரிவுவிட்டு உயிர்த்து - (குபேரதத்தன்) வருத்தந் தோன்ற நெடுமூச் செறிந்து; என் பாவை உள்ளிய பொருள் மற்று அஃதேல் - என் மகள் நினைத்த பொருள வேறொன்று அன்றி அத்தன்மை ஆயின்; ஓ பெரிது உவப்பக் கேட்டேன் - ஓ! மிகவும் மகிழ்வாகக் கேட்டேன்; வள்இதழ்க் கோதை - வளவிய மலர்க்கோதையாள்; மற்று நகரொடும் கடியுமேனும் - (இத்தெருவிலன்றி நகர்முழுதும் உட்பட ஆடவரை நீக்க விரும்பினாளெனினும்; வெள்ளநீர் நிதியின் - வெள்ளமென்னும் எண்கொண்ட செல்வத்தினால்; வேண்டிய இன்னே விளைப்பல் என்றான் - விரும்பியவ்ற்றை இப்போதே முடிப்பேன் என்றான்.

(வி - ம்.) மற்று: இரண்டும் வினைமாற்று. ஓர் மகிழ்ச்சிக் குறிப்பு.

பள்ளிகொள்யானை பெருமூச்செறிதல் இயல்பு. இதனை - ”பள்ளி யானையின் வெய்ய உயிரினை' எனவும் (நற்றிணை. 253-2.) , ”பள்ளி யானையின் உயிர்த்து” எனவும் (குறுந். 142.) பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. ஓ பெரிதென்புழி ஓகாரம் வியப்பின்கண் வந்தது. நகரொடும் என்புழி உம்மை சிறப்பு. 'எல்லாம் பொருளில் பிறந்து விடும்' என்பதுபற்றி 'நிதியின் இன்னே விளைப்பல்' என்றான்.

( 55 )