| குணமாலையார் இலம்பகம் |
524 |
|
| 906 |
இன்னதோர் காலத் தின்னா |
| |
னொருமக ளின்ன தொன்றிற் |
| |
கின்னதோ ரிடத்தி னெல்லை |
| |
யாட்கடிந் தொழுகி னாள்போ |
| |
லின்னதோர் நகரி லென்றாங் |
| |
கென்பெயர் நிற்க வேண்டு |
| |
மின்னதோ ராரந் தம்மோ |
| |
வென்றுகொண் டேகி னானே. |
|
|
(இ - ள்.) இன்னது ஓர் காலத்து - இத்தன்மைத்தான ஒரு காலத்தே; இன்னான் ஒரு மகள் - இன்ன வணிகனுடைய ஒப்பற்ற மகள்; இன்னது ஒன்றிற்கு - இன்னதொரு செயலுக்கு; இன்னது ஓர் இடத்தின் எல்லை - இத் தெருவிடத்தின் எல்லையிலே; ஆள்கடிந்து ஒழுகினாள் - ஆடவரை வெறுத்து வாழ்ந்தாள்; இன்னது ஒர் நகரின் என்று - இத் தன்மைத்தான நகரிலே என்று; என் பெயர் நிற்க வேண்டும் - என்புகழ் நிலைபெற வேண்டும்; இன்னது ஓர் ஆரம் தம்மோ - விலையில்லாத இந்த ஆரத்தைத் தருவாயாக; என்று கொண்டு ஏகினான் - என்றுரைத்து, அதனைக் கையிற்கொண்டு சென்றான்.
|
|
|
(வி - ம்.) போல், ஆங்கு: உரையசைகள். ஆங்கு - அரசனிடத்தே என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தம்மோ - தருவாயக. 'நல்லெயில் உழந்த செல்வர்த் தம்மின்' (மதுரைக். 731) என்றார் பிறரும்.
|
|
|
செயற்கரிய செயலாகலின் இதனால் புகழ் உண்டாதல் ஒருதலை என்பான் ” என் பெயர் நிற்கவேண்டும்” என்றான்.
|
( 56 ) |
| 907 |
வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் |
| |
செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு |
| |
மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப |
| |
கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. |
|
|
(இ - ள்.) வையகம் மூன்றும் விற்கும் மாமணி ஆரம் ஏந்தி - மூவுலகையும் விலைகொள்ளும் பெரிய மணிமாலை ஒன்றை ஏந்திச் சென்று; செய்கழல் மன்னற்கு உய்த்து - கழல் அணிந்த வேந்தனுக்குக் கையுறையாக நல்கி; தன்குறை செப்பலோடும் - தன் வேண்டுகோளை விளம்பினவுடன்; ஐ என மன்னன் ஏவ - அழகியதே என்று வேந்தன் அவ்வாறு செய்யப் பணிக்க; ஆள் வழக்கு அற்றது - தெருவிலே ஆடவர் வழங்குதல் நீங்கியது; கைபுனை பாவை எல்லாம் - அப்போது அம் மாடத்திலே
|
|