| குணமாலையார் இலம்பகம் |
527 |
|
|
அப் பொற்பசுவைத் தானஞ்செய்திடுவர். இஃது அரசர்க்குரிய தானங்களில் ஒன்றென்பர்.
|
|
|
'உண்டற்குரிய அல்லாப் பொருளை - உண்டன போலக் கூறலும் மரபே' (தொல். பொருளியல்-19) என்றதனால் 'உண்டது' என்றார்; 'குணனுணப் பட்டோர்' (கலி. 23) என்றாற்போல. மீசை - மிசை; முதனீண்டது. மீமிசை என்பதன் கண் மி : கெட்டது எனினுமாம்.
|
( 61 ) |
| 912 |
மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய |
| |
சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயி |
| |
னிகரி னேமிதன் னீணகர்க் காகெனா |
| |
நகரம் நாலிரு கோடி நயந்ததே. |
|
|
(இ - ள்.) மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய - மீனக் கொடியை உடைய காமனை வென்ற; சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில் - உச்சியையுடைய செம்மலை போலும் வடிவத்தையும் நெருப்பின் வண்ணத்தையும் உடைய பொன்மதிலையுடைய; நிகரில் நேமிதன் நீள்நகர்க்கு - ஒப்பற்ற நேமிநாதரின் பெரிய கோயிலுக்கு; ஆகஎனா - ஆகுக என்று; நால் இருகோடி நகரம் நயந்தது - எட்டுக்கோடி பொன்னை நகரம் நீராடுதானமாக நல்கியது.
|
|
|
(வி - ம்.) காமனை வாட்டிய நேமிநாதர்; காமனை வாட்டிய பொன் எயிலுமாம். 'அளித்தது' என்றும் பாடம்.
|
|
|
மகரவெல் கொடிமைந்தன் என்றது காமனை. நேமி - நேமிசுவாமி என்னும் 22 ஆம் தீர்த்தங்கரர். நகரம், கோடி என்பன ஆகுபெயர்கள்.
|
( 62 ) |
வேறு
|
|
| 913 |
உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் |
| |
கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் |
| |
றவாவினை யடைகரை தயங்கு சிந்தை நீ |
| |
ரவாவெனு முடை கட லடைக்கப் பட்டதே. |
|
|
(இ - ள்.) இரவலர்க்கு உவாமுதல் உடைமை உய்த்தவர் - இரவலர்க்குப் பொன்னையே யன்றி யானை முதலான உடைமைகளை (முற்படக்) கொடுத்து அவர்கள்; கவான் முதல் கூப்பிய கனக மாழையால் - (பின்னும்) அவ்விரவலரின் காலடியிலே குவித்த பொற்கட்டியால்; தவாவினை தயங்கு சிந்தைநீர் - இரவலரின் கெடாத தீவினையாலுண்டாகிய உள்ள வருத்தம் என்னும் நீரினால்; அடைகரை உடை அவாஎனும் கடல் - அடைகரை உடைந்த ஆசையென்னும் கடல்; அடைக்கப்பட்டது - அடைபட்டது.
|
|