| குணமாலையார் இலம்பகம் | 
531  | 
 
  | 
 
| 
    (இ - ள்.) பீலி மஞ்ஞை நோக்கி - தோகை மயிலின் ஆடலைக்கண்டு; கோலம் நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப - அழகிய நீண்ட கண்களையுடைய பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துக் கொண்டு ஈரம் புலர்த்தியிருக்க; பேடை மயில் என்று எண்ணி - பெண்மயில் அவர்களை ஆண்மயில் என்று நினைத்து; ஆலிச் சென்று புல்லி - அகவிச் சென்று தழுவி; அன்மை கண்டு நாணி - தோகைமயில் அல்லாமையைக் கண்டு வெள்க; சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின்-(அதனைக் கண்டு தன் பேடை அறியுமாறு) பொழிலை நோக்கிச் செல்லும் தோகையின் அழகைப் பார்மின். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) இனி, நாணி யெனவே கொண்டு நாணிய பெட்டை, சோலையை நோக்கி நடக்கும் . அவ்வாறிருக்கும் தோகை போல்வாரைக் காண்மின் என்றுமாம். 
 | 
( 69 ) | 
 
 
|  920 | 
மின்னொப் புடைய பைம்பூ |  
|   | 
  ணீருள் வீழக் காணா |  
|   | 
ளன்னப் பெடையே தொழுதே |  
|   | 
  னன்னை கொடியள் கண்டா |  
|   | 
யென்னை யடிமை வேண்டி |  
|   | 
  னாடித் தாவென் றிறைஞ்சிப் |  
|   | 
பொன்னங் கொம்பி னின்றாள் |  
|   | 
  பொலிவின் வண்ணங் காண்மின். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) மின் ஒப்புஉடைய பைம்பூண் நீருள் வீழக் காணாள் - மின்போல ஒளி வீசும் பசிய அணிகலன் நீரிலே விழத் தேடி (நீரசைவினால்) காணாளாய்; அன்னப் பெடையே! தொழுதேன், அன்னை கொடியள் கண்டாய் - பெண்ணன்னமே! நின்னைத் தொழுதேன், என் அன்னை கொடியள் என்பதை அறவிய்; என்னை அடிமை வேண்டின் நாடித்தா - என் அடித்தொண்டு நினக்கு விருப்பமாயின் தேடி எடுத்துக கொடு; என்று இறைஞ்சி - என்று கூறி வணங்கி; பொன்அம் கொம்பின் நின்றாள் - பொன்னாலாகிய அழகிய கொம்புபோல நிற்பவளின்; பொலிவின் வண்ணம் காண்மின் - அழகின் தன்மையை நோக்குமின். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) இது தோழியின் மொழி என்றும், அன்னப் பெடை என்றது தலைவியை என்றும், அன்னை என்றதும் தோழியின் தாயை என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், 'என்று' என்பதை, 'என்ன' எனத் திரித்துத் தோழி கேட்ப, அதற்கு நாணி இறைஞ்சிப் பொற்கொம்பென நின்றவள் தலைவி யென்றும் கூறுவர். 
 | 
  |