பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 532 

   அன்னப்பெடை என்பதற்குப் பறவை என்று கொள்ளுதலே சிறப்பு; என்னை? அவளின் பேதைமை நன்கு புலப்பட்டு இன்பந் தருதலான் என்க.

( 70 )
921 தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத்
தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக்
காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப்
பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே.

   (இ - ள்.) தூமம் கமழும் கோதை - அகிற்புகை மணம் பயின்ற கோதை போல்வாள்; தொடுத்த துயரி முலை ஆ - வாசித்த யாழ்நரம்பு முலையாக; தேன்மென் கீதம் பால் ஆ - (அதில் தோன்றிய) இனிய மெல்லிசை பாலாக; சுரந்து திறத்தின் ஊட்டி - சுரந்து செவ்விதின் ஊட்டி; காமக்குழவி வளர்ப்ப - காமமாகிய குழவியை வளர்ப்ப; புனலுள் கணவன் நீங்கி - நீரில் ஆடிக்கொண்டிருந்த அவள் கணவன் அதுகேட்டு நீங்கிக் கூட்ட விருப்பத்தினால்; பூமென் பொழிலுக்கு இவர்வான் - மலர்களையுடைய மெல்லிய சோலைக்குப் போகின்றவனுடைய; புகற்சி இனிது காண்மின் - விருப்பத்தை இனிதே நோக்குமின்.

 

   (வி - ம்.) இதனால், அவள் முன்னே குளித்தேறிக் கூட்டம் விரும்பி யாழ் வாசித்தமை கூறினாராயிற்று. காமக் குழவி - காமத்தையுடைய இளமைச் செவ்வி; அது காமமாகிய பிள்ளையை வளர்ப்பப் பிள்ளை வாயிலாகச் சென்ற்னென்றாற்போல நின்றது.

 

   துயரி - யாழ்நரம்பு. இன்னிசை காமப் பண்பினை மிகுவித்தலான் அதனைப் பால் என்னும் காமத்தைக் குழவி என்றும் கூறினார்.

( 71 )
922 கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன்
மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி
நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு
விடலில் விசும்பின் மின்போல் மின்னி வீழ்வகாண்மின்.

   (இ - ள்.) கடல் அம் பவளம் கன மணையின் - கடலிற் கிடைத்த அழகிய பவளத்தாலாகிய கனத்த மணையிற்கோத்த; பொன் கயிற்றின் - பொன்னலாகிய கயிற்றினால்; காய்பொன் மடல் அம் கமுகின் ஊசல் - காய்ச்சிய பொன் மடலையுடைய கமுக மரத்திற் கட்டிய ஊசலை; மடந்தை நுடங்கி ஆட - மங்கையாள் ஒசிந்து ஆடும்படி; நடலை நடுவின் மகளிர் நூக்க - பொயயான இடையினையுடைய பெண்கள் ஆட்ட; பரிந்த காசு (அவர்களின் கைதீண்டி) அற்ற் மணிகள்; விசும்பின் மின்போல் மின்னி விடலில் வீழ்வ காண்மின் - வானிலேயிருந்து வீழும் மின்னைப்போல மின்னித் தொடர்ச்சியாக வீழ்வதை நோக்குமின்.