பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 533 

   (வி - ம்.) பவளம் கன மணையின் எனமாறுக. காய்பொன் : வினைத்தொகை. நடலை - துன்பமுமாம். விசும்பின் விடல் இல்மின் என மாறுக. வீடல்இல்மின் என்றது இடையறாத மின்னல் என்றவாறு.

( 72 )
923 நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத்
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின்.

   (இ - ள்.) நலம்கொள் பூம்பட்டு நான நீரில் கலந்து ஒளிப்ப - அழகிய பூம்பட்டு நானத்தையுடைய குளிக்கினற நீராலே நனைந்து உடம்பிலே ஒடுங்குதலின்; தோன்ற விளங்கி மேனி வெளிப்பட்டதற்கு நாணி - நன்றாக விளக்கமுற்றுத் தம் மெய்யழகு வெளிப்பட்டதற்கு வெளகி; மான மகளிர்போல மணிமேகலைகள் பேசா - மானமுற்ற பெண்டிர்போல மணி மேகலைகள் பேசாமல்; தானம் தழுவிக்கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின் - அல்குலைத் தழுவிக் கிடக்குமாறு செல்கின்றவளின் நிலையை நோக்குமின்.

 

   நானம் - புழுகு; குளித்தலுமாம். நீரான் நனைந்து பட்டோடு பொருந்துதலானே ஒலியவிந்த மேகலைகளை மேனி வெளிப்பட்டதற்கு நாணி அற்றங்காத்து வாய் வாளாகிடந்த என்னுமித் தற்குறிபபேற்றம் ஆற்றவும் இனிதாதல் உணர்க.

 
923 நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத்
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின்.
924 தீம்பாற் பசியி னிருந்த
  செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஓம்பு தாய்நீர் குடைய
  வொழிக்கும் வண்ண நாடிப்
பாம்பால் என்ன வெருவிப்
  பைம்பொற் றோடு கழலக்
காம்போ் தோளி நடுங்கிக்
  கரைசோ் பவளைக் காண்மின்.

   (இ - ள்.) தீ பால் பசியின் இருந்த செவ்வாய் சிறு பைங்களி - இனிய பால்பருகப் பசியுடன் இருந்த சிவந்தவாயையுடைய சிறிய பச்சைக்கிளி; தன் ஓம்பு தாய் நீர்குடைய - தன்னைக் காக்கும் அன்னை தன் பசியை அறியாமல் நீர் குடைதலாலே; ஒழிக்கும் வண்ணம் நாடி - அவளை நீர்குடையாமல் தடுக்கும் வகையிதுவென எண்ணி ; பாம்பு என்ன - பாம்பு பாம் பென்று கூவ; காம்பு ஏர் தோளி வெருவி நடுங்கி - வேய்த்தோளினாள் அஞ்சி நடுங்கி; பைம்பொன் தோடு கழல் - பசிய