பக்கம் எண் :

 
                   
குணமாலையார் இலம்பகம் 534 

பொற்றோடு கழலுமாறு; கரை சேர்பவளைக் காண்மின்-(வந்து) கரையை அடைகின்றவளை நோக்குமின்.

 

   (வி - ம்.) பாற்பசி - பாலுண்ணாமையால் உண்டான பசியுமாம். ஓம்புதாய் - தன்னை ஊட்டி வளர்க்கும் தாய். வண்ணம் ஈண்டு உபாயம். பாம்பால் என்புழி ஆல் அசைச்சொல்; பாம்பு பாம்பு என அடுக்கி வர வேண்டியது தனித்து வந்தது செய்யுளாகலின். காவிய உலகில் கிளிகள் உலகக் கிளிகளில் சிறந்தன என்க.

( 74 )
 
925 துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோன்
மணியார் வளைசோர் முன்கை வலனுமிடனும் போக்கி
யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க
வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின்.

   (இ - ள்.) துணைஇல் தோகை மஞ்ஞை - பெடையில்லாது தனித்த தோகைமயில்; ஈயற்கு இவரும் வகைபோல் - சுற்றிப் பறக்கும் ஈயலைப் பற்ற அவற்றின்மேற் செல்லும் கூறுபாடு போல; இணை இல் தோழிமார்கள் இடை இறுமால் என்று இரங்க - ஒப்பற்ற தோழியர் 'நின்இடை ஒடியுமே' என்று இரக்க முறுமாறு; மணிஆர் வளைசேர் முன்கை வலனும் இடனும் போக்கி - மணிபதித்த வளையல் அணிந்த முன்கையை வலமாகவும் இடமாகவும் செலுத்தி; பூம்பந்து ஆடும் அணிஆர் கோதையவளைக் காண்மின் - அழகிய பந்தை ஆடும் அணி பொருந்திய கோதையாளைப் பார்மின்.

 

   (வி - ம்.) இச் செய்யுளின்கண் பந்தாடும் ஒருத்தியைத் தன்மை நவிற்சியாகக் கூறி அவளுககு வானிலே பறக்கும் ஈயலைக் கவ்வ அணந்துதிரியும் மயிலை உவமையாக எடுத்துக் கூறிய தேவர் புலமைத் திறம் நினைந்து நினைந்து இன்புறற்பாலது.

( 75 )
 
926 திருவின் சாய லொருத்தி
  சேர்ந்த கோலங் காண்பான்
குருதித் துகிலி னுறையைக்
  கொழும்பொன் விரலி னீக்கி
அரவ முற்றும் விழுங்கி
  யுமிழும் பொழுதின் மதிபோன்
றுருவத் தெண்கண் ணாடி
  காண்மின் தோன்றும் வகையே.

   (இ - ள்.) திருவின் சாயல் ஒருத்தி - திருமகளின் மென்மையுடையாள் ஒரு மங்கை; சேர்ந்த கோலம் காண்பான் - தான் கொண்ட கோலத்தைக் காண்பதற்கு; குருதித் துகிலின்