பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 535 

உறையைக் கொழும்பொன் விரலின் நீக்கி - (கண்ணாடிக்கிட்ட) செம்பட்டுறையை வளவிய பொன்னாழியணிந்த விரலாலே நீக்க; அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதிபோன்று - செம்பாம்பு தன்னை முழுதும் பற்றித் திரும்ப விடும்போது தோன்றும் திங்கைளைப் போல; உருவம் தெண்கண்ணாடி தோன்ற வகை காண்மின் - நிறமுறும் தெளிந்த கண்ணாடி காண்குறும் இயல்பை நோக்குமின்.

 

   (வி - ம்.) நீக்கி - நீக்க: எச்சத்திரிபு. காண்பான் : எதிர்கால வினையெச்சம்.

 

   திரு - திருமகள். குருதித்துகிலின் உறை - செம்பட்டுறை; இது செம்பாம்புக்குவமை. அரவம்-ஈண்டுக் கேது. தோன்றும் வகை காண்மின் என மாறுக.

( 76 )
927 பலகை செம்பொன் னாகப்
  பளிங்கு நாயாப் பரப்பி
யலவ னாடும் வகைபோ
  லரும்பொன் கவறங் குருளக்
குலவும் பவழ வுழக்கிற்
  கோதை புரளப் பாடி
யிலவம் போதோ் செவ்வா
  யிளையோர் பொருவார்க் காண்மின்.

   (இ - ள்.) செம்பொன் பலகை ஆக - செம்பொன்னாற் பலகையாக; பளிங்கு நாய் ஆப் பரப்பி - பளிங்கினாலே நாயாகச் செய்தவற்றைப் பரப்பி; அல்வன் ஆடும் வகைபோல் அரும்பொன் கவறு அங்கு உருள - நண்டு ஆடுந் தன்மைபோல அரிய பொன்னால் ஆன கவறு தன்னிடத்தே உருளுமாறு; குலவும் பவழ உழக்கில் - பண்ணின பவழ உழக்காலே; கோதை புரளப் பாடி - கோதை அசையுமாறு பாடிக்கொண்டு; இலவம்போது ஏர் செவ்வாய் - இலவ மலரனைய அழகிய செவ்வாயையுடைய; இளையோர் பொருவார்க் காண்மின் - இளமங்கையர் கவறாடுவாரை நோக்குமின்.

 

   (வி - ம்.) செம்பொன்னாலியற்றிய பலகைமிசை பளிங்காற் செய்த நாய்களைப் பரப்பிப் பொன் உழக்கில் பொன் கவறுகளையிட்டு உருட்டிப் பாடிக்கொண்டு சூதுப்போர் பொருதும் மகளிரைக் காண்மின் என்றவாறு.

( 77 )
928 தீம்பா லடிசி லமிர்தஞ்
  செம்பொன் வண்ணப் புழுக்க
லாம்பா லக்கா ரடலை
  யண்பன் னீரூ றமிர்தம்