| நாமகள் இலம்பகம் |
54 |
|
|
கிடந்த - (அவை) பாரிலே கிடந்த இந்திர வில்போலத் தெருவிலே கிடந்தன.
|
( 57 ) |
| 87 |
பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேற் |
| |
றூத்திரண் மணிக்குட நிரைத்துத் தோன்றுவ |
| |
பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந் |
| |
தேத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே. |
|
|
(இ - ள்.) பாத்து அரும் பசும்பொனின் மாடத்து உச்சிமேல் - மாற்றற்ற அரிய புதிய பொன்மயமான மாடங்களின் உச்சியில்; தூரத்திரள் மணிக்குடம் நிரைத்துத் தோன்றுவ - தூய திரண்ட நீல மணிக்குடம் நிரையாகத் தோன்றுவன; பூத்தன வேங்கைமேற் கார்நினைந்து - மலர்ந்த வேங்கை மரங்களின்மேல் முகிலை நினைத்தலால்; ஏத்தரு மயில் குழாம் பொலிந்து இருந்த போன்ற - மேனோக்கிய மயிலின் திரள் பொலிவுடன் இருந்தன போன்றன.
|
|
|
(வி - ம்.) 'ஏக்கழுத்தம்' (சீவக. 496) என்றார் பின்னும்.
|
|
|
பூத்தன வேங்கை : பூத்தன : வினைமுற்றுப் பெயரெச்சமாயிற்று. 'பூத்த வேங்கை வியன்சினையேறி மயிலினம் அகவும் நாடன்' (யாப்பருங்கலவிருத்தி, 50 உரை மேற்கோள்).
|
( 58 ) |
| 88 |
நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர |
| |
வுடம்புவோ்த் தினமழை யுரறி நோக்கலி |
| |
னடுங்குபு நல்வரை மாடத் துச்சியி |
| |
லடங்கிவீழ்ந் தருவியி னழுவ போன்றவே. |
|
|
(இ - ள்.) நெடுங்கொடி நிழல்மதி நெற்றி தைவர - நீண்ட கொடி மிக்குச்சென்று ஒளிவிடும் திங்களின் நெற்றியைத் தடவுதலின்; இனமழை உடம்பு வேர்த்து உரறி நோக்கலின் - திரண்ட மேகங்கள் மெய்புழுங்கி வேர்த்து இடித்து நோக்கிப் பெய்தலின்; அருவியின் நடுங்குபு - உள்ள அருவித் திரளால் நடுங்கியவாறு; நல்வரை மாடத்து உச்சியில் அடங்கி வீழ்ந்து அழுவ போன்ற - அழகிய மலையனைய மாடங்களின் உச்சியிலே குவிந்து வீழ்ந்து அழுவனபோலே யிருந்தன.
|
|
|
(வி - ம்.) சிலர் கோபத்திற்கஞ்சிச் செருக்கடங்கி அழுதனர் என்பது போதரும் [குறிப்புப் பொருள்].
|
( 59 ) |
| 89 |
பொற்சிறு தோ்மிசைப் பைம்பொற் போதக |
| |
நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ |
| |
யுற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை |
| |
மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே. |
|