பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 540 

   (வி - ம்.) பட்டதை : ஐ : சாரியை; பகுதிப்பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். அன்று, ஏ : அசைநிலைகள்.

( 85 )
936 வேள்வியி லுண்டி விலக்கிய நீவிர்க
ளாளெனக் கென்ற தறைவது மோரார்
தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை
நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும்,

   (இ - ள்.) வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள் எனக்கு ஆள் என்று அறைவதும் ஓரார் - (நாய் கதறுவது) வேள்வியில் எனக்கு உணவின்றித் தடுத்த நீங்கள் எனக்கு மறுபிறவியில் ஆள் என்பதுபோல அறைவதையும் உணராராய்; மூர்க்கர் தாள் இற அதுக்கலின் - கொடிய அந்தணர் அதன் காலொடிய அடிக்கலுற்றதும்; அது நீள் கயம் பாய்ந்து நீந்துதலோடும் - (அடி தாங்க இயலாத) அந் நாய் பெரிய கயத்திலே பாய்ந்து நீந்தினவுடன்,

 

   (வி - ம்.) நீந்துதலோடும் 'ஒருவன் தோன்றினான்' என அடுத்த செய்யுளில் முடியும்.

 

   நச்சினார்ககினியர் (934 - 936) மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக்கூறும் முடிபு: -

 

   தீயன நீரராகிய அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை ஒரு நாய் வந்து கௌவிற்று; அவர் அதுகண்டு, இனிப் பிழைத்துப்போவை என்று கூறி ஓடி எடுத்த கல்லையும் தடியையும் கையிலே உடையராய்க் கனன்று காற்றினும் கடுக விரைந்தோடி, அது நீள்கயத்தே பாய்ந்து நீந்தின அளவிலே வளைத்தனராகி, அம்மூர்க்கர் அறைவதும் ஓராராய்த் தாளிற அடித்தலின், அது வல்வினையார் வலையிலே அகப்பட்டே விட்டது; அதனைப் பின்னரும் கொன்றிடு கூற்றிற் காட்டிற் கொல்லுந் தன்மையை மேயினர்.

( 86 )

வேறு

 
937 மட்குட மல்லன மதியின் வெள்ளிய
கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன்
றுட்கென யாவரும் நடுங்கத் தூய்மையி
லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான்.

   (இ - ள்.) மண்குடம் அல்லன மதியின் வெள்ளிய கள்குடக் கன்னியர் இருவரோடு - மண்ணாலாக்கப்படாமல் திங்களினும் வெள்ளிய வெள்ளியாற் செயப்பட்டனவாகிய கள்குடங்களைச் சுமந்த கன்னியரிருவரோடு; தூய்மையில் உட்கு உடைக் களிமகன் ஒருவன் - தூய்மையற்ற அச்சந் தரும் தோற்றமுடைய கட்குடியன் ஒருவன்; யாவரும் உடன் துட்