பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 542 

   (வி - ம்.) அழல் நறவு, அம்பூ நறவு எனத் தனித்தனி கூட்டி அழல்வதும் அழகிய பூவாற்சமைத்துமாகிய கள் எனினுமாம். அழல் - வெப்பம். காழகம் - கருமைநிறம். மழலைச் சொல், ஈண்டுக் குழறிப்பேசும் சொல். வைதுபின்னர் இவை கூறினான் என்க.

( 89 )
940 புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர்
கடுக்கப் போ்த்தனிர் தம்மின் கலாய்க்குறிற்<
றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி
னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான்.

   (இ - ள்.) என் நாயினைப் புடைத்துப் பொன்றுவித்தீர் - என் நாயை அடித்துக் கொன்றுவிட்டீர்; அவ்வுயிர் கடுக்கப் பேர்த்தனிர் தம்மின்! -அவ்வுயிரை விரைய மீட்டுத் தருவீராக; கலாய்க்குறின் தடக்கை மீளிமை தாங்குமின்!- கலகம்புரியின் என் பெரிய கையின் வலிமையைப் பொறுப்பீராக!; அன்றெனின் கட்குடம் உடைப்பென என்று உரையாடினான் - அவ்விரண்டும் அல்லவாயின் கட்குடம் உடைப்பேன் என்று கூறினான்.

 

   (வி - ம்.) கட்குடம் உடைத்தல் குறிப்பு மொழி. கடுக்க : கடுக: விரித்தல் விகாரம். கலாய்க்க உறின் : கலாய்க் குறின் : அகரம் தொகுத்தல் விகாரம்.

( 90 )

வேறு

 
941 நல்வினை யொன்று மிலாதவ னான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே<
செல்சுடர் வேல்வல சீவக சாமிசென்
றல்ல லகற்றி யருந்துயர் தீர்த்தான்.

   (இ - ள்.) நல்வினை ஒன்றும் இலாதவன் - நல்வினை ஒன்றும் செய்தறியாதவன்; நான்மறை வல்லவர் தம்மை வருத்தலின் - நான்மறை வல்லாளரைத் துன்புறுத்தலின்; செல்சுடர் வேல்வல சீவகசாமி வல்லே சென்று - ஒளி வீசும் வேலை யேந்த வல்ல சீவகன் விரைந்து சென்று; அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான் - அக் களிமகன் நாயிழந்த துன்பத்தை முதற்போக்கி அந்தணர் துயரத்தையுங் களைந்தான்.

 

   (வி - ம்.) நல்வினை இலாதவன் என்றது களிமகனை. நான்மறை வல்லவர் என்றது மறைவல்லவரேயல்லது அவர்கிருக்கவேண்டிய செந்தண்மையில்லாதவர் என்பது பட நின்றது. வல்லே - விரைந்து.

( 91 )
942 மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ
னீண்டிய தோழரொ டெய்தின னாகி<
மாண்ட வெயிற்றெகி னம்மற மில்லது
காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான்.