| குணமாலையார் இலம்பகம் |
544 |
|
|
இரு கண்களும் சென்று உகு நீரொடு - இரு கண்களாலும் வடிந்து வீழ்கின்ற நீருடனே; செம்மலை நோக்கி - சீவகனைப் பார்த்து; ஒன்றுபு வால்குழைத்து உள் உவப்பு எய்தலும் - ஒருமனப்பட்டு வாலைக் குழைத்து மகிழ்ந்த அளவிலே ; குன்று அனையான் பதம் கூற வலித்தான் - சலிப்பற்ற சீவகன் (இது தான் காலம் என) மறையைக் கூறத் துணிந்தான்.
|
|
|
(வி - ம்.) செம்மல் : சீவகன். ஒன்றுபு - மனம் ஒருமைப்பட்டு. குன்றலையான் : சீவகன். வலித்தான் - துணிந்தான்.
|
( 94 ) |
வேறு
|
|
| 945 |
நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் |
| |
முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து< |
| |
மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ |
| |
குதற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். |
|
|
(இ - ள்.) நல்செய்கை ஒன்றும் இல்லார் - இம்மையில் நல்வினை ஒன்றுமில்லாதவர்; நாள் உலக்கின்ற போழ்தின் - வாழ்நாள் கழிகின்ற காலத்தே; முன்செய்த வினையின் நீங்கி - (இம்மையில்) அவர் இறக்குமுன் செய்த தீவினையிலிருந்து நீங்க; நல்வினை விளைக்கும் வித்து - (பழவினையாகிய) நல்வினையைத் தரும் வித்தாகிய; மந்திரம் ஐந்தும் - மறை ஐந்தையும்; மல் செய்து வீங்கு தோளான் - மற்போர் புரிந்து பருத்த தோளையுடைய சீவகன்; தன் செய்கை தளிர்ப்ப ஆங்கு தாழ்ந்து அதன் செவிச் செப்புகின்றான் - மறையின் செய்கை தழைக்கும் படியாக ஆங்கே தாழ்ந்து நாயின் செவியிலே செப்புவான் ஆயினான்.
|
|
|
(வி - ம்.) நீங்கி - நீங்க : எச்சத்திரிபு. 'தற்செய்கை தளிர்ப்ப' என்பதனை அடுத்த செய்யுளில் 'அகற்றினான்' என்பதோடு முடிப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
நற்செய்கை - தானம் தவம் சீலம் அறிவர்ச் சிறப்பு என்பன. நாள் - வாழ்நாள். தற்செய்கை என்புழித் தன் என்றது மந்திரத்தை.
|
( 95 ) |
| 946 |
உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில் |
| |
மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத்< |
| |
திறுகனீ யிறைவன் சொன்ன வைம்பத வமிர்தமுண்டாற் |
| |
பெறுதிநற் கதியை யென்று பெறுநவை யகற்றி னானே. |
|
|
(இ - ள்.) உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று - நன்மையாக முன்னே செய்தது ஒன்றுமில்லாமல் இருந்
|
|