பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 545 

தேன் என்று; நீ நெஞ்சில் மறுகல் - நீ உள்ளத்திலே நினைந்து மறுகாதே; பற்றொடு ஆர்வம் விட்டிடு - பற்றையும் ஆர்வத்தையும் விடு; மரண அச்சத்து இறுகல் - இறப்பெனும் அச்சத்திலே நிலைபெறாதே; (அவ்விதம் இருந்து) ; இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் நீ உண்டால் - இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை நீ பருகினால்; நற்கதியைப் பெறுதி என்று - நல்ல கதியை அடைவாய் என்று கூறி; பெரு நவை அகற்றினான் - பெருந்துன்பத்தை நீக்கினான்.

 

   (வி - ம்.) மறுகல் - சுழலாதேகொள் : வியங்கோள். பற்று - உள்ள தன் மேலுளது. ஆர்வம் - பெறவேண்டியதன் மேலுளது. விட்டிடு: ஒரு சொல். இறுகல் - நிலைபெறாத கொள்: வியங்கொள்.

 

   'பெறுதி நற்கதியை' என்பதன் முன் அடுத்த செய்யுளில் உள்ள, 'நின் கண் நின்ற நீனிற வினையின் நீங்கி' என்பதைச் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். மற்றும் 'இறுகல்' என்பதன்பின் 'பெறுநவை அகற்றினான்' என்பதைச் சேர்ப்பர்.

( 96 )
947 மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்து
நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி<
யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற்
கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே.

   (இ - ள்.) மனத்திடைச் செறும்பு நீக்கி - உள்ளத்திலுள்ள செற்றத்தை நீக்கி; மறவலை ஆகி ஐந்தும் நினைத்திடு - மறவாமல் ஐம்பதத்தையும் நினைப்பாயாக ; நின்கண் நின்ற நீல்நிற வினையின் நீங்கி - நின்னிடமுள்ள தீவினையிலிருந்து விடுபட்டு; எனைப் பகல்தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு - எப்போதும் நீங்காத பேரின்பத்தைத் தரும் என்று உபதேசித்தானுக்கு; அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று - அத்தகைய பதமான அமிர்தத்தை நெஞ்சாலே பருகி; விட்டு அகன்றது - நாயுடம்பை விட்டு நீங்கியது.

 

   (வி - ம்.) 'செறும்பு நீக்கி' என்பதை முற்செய்யுளில், 'உறுதி முன் செய்ததின்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் மறுகல்' என்பதன் முன் சேர்ப்பர்.

 

   செறும்பு - காம வெகுளி மயக்கம். மறவலையாகி - மறத்தலிலையாகி, ஐந்தும் : ஆகுபெயர் ; என்றது ஐந்தெழுத்து மந்திரத்தை. நீல்நிறவினை என்றது தீவினையை. விள்ளா இன்பம் - நீங்காத பேரின்பம்.

( 97 )

வேறு

 
948 பாடு பாணி முகமெனும் பான்மையி
னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற்
கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந்
தாடு கூத்தரி னையெனத் தோன்றினான்.