பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 547 

அரம்பையர் தம் உழை - அரம்பையரிடத்தே; மகிழ்வு எய்தினான் - களிப்புற்றான்.

 

   (வி - ம்.) மடங்கல் ஏறு - ஆண் சிங்கம். அல்குலையும் முலையினையும் முகத்தினையும் சாயலையும் உடைய அரம்பையர் என்று விதந்தார். அவர்தரும் போகவின்பத்தின் சிறப்புணர்த்தற்கு.

( 100 )

வேறு

 
951 கற்றவைம் பதங்க ணீராக்
  கருவினை கழுவப் பட்டு
மற்றவன் றேவ னாகி
  வானிடு சிலையிற் றோன்றி
யிற்றத னுடம்பு மின்னா
  விடரொழித் தினிய னாகி
யுற்றத னிலையும் எல்லாம்
  ஓதியின் உணர்ந்து கொண்டான்.

   (இ - ள்.) கற்ற ஐம்பதங்கள் நீர்ஆ - கற்ற பஞ்சநமக்கார மந்திரம் நீராகக் கொண்டு ; கருவினை கழுவப்பட்டு - தீவினை கழுவப்பெற்று; அவன் வான் இடு சிலையின் தேவன் ஆகித் தோன்றி - அவன் இந்திர வில்போல வானவனாகித் தோன்றி; இற்ற தன் உடம்பும் - விடப்பட்ட தன் உடம்பையும்; இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி உற்றவன் நிலையும் - துன்பந்தரும் இடரைக் கெடுத்துத் தனக்கு இனியவனாகித் தன்னைச் சேர்ந்த சீவகன் நிலையும்; எல்லாம் ஓதியின் உணர்ந்து கொண்டான் - யாவற்றையும் தன் அகஅறிவினாற் கண்டுணர்ந்தான் என்க.

 

   (வி - ம்.) 'இற்றஅவ் வுடம்பு' எனவும், 'உற்றவன் நிலை' எனவும் பாடம்.

 

   ஐம்பதங்கள் - ஐந்தெழுத்து மந்திரம். கருவினை - ஈண்டுத் தீவினை. முன்னர் நீனிறவினை என்றதும் நினைக. ”வானிடு சிலையிற்றோன்றி” என்பதற்கு, நூல்கள் இந்திரவில் இன்னவாறு தோன்றுமென்று அது தோன்று முறைமை கூறாவாகலின் அங்ஙனம் தோன்றுகின்ற தேவர்க்கு அஃது உவமையாயிற்று. இக் கருத்தானன்றே 'வானிடு வில்லின் வரவறியா' என்றா

 

   பிறரும்” என்று வியக்கங் கூறியுள்ளார். ஓதி - முற்பிறப்பை யுணரும் அறிவு.

( 101 )

வேறு

 
952 இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத்
தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை
விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான்
சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே.