| குணமாலையார் இலம்பகம் |
548 |
|
|
(இ - ள்.) இரும்பின் நீர்மை கெடுத்து - இரும்பைப் போன்ற இழிநிலையைக் கெடுத்து; எரிதன் நிறத்து அரும்பொன் ஆக்கிய - தீ நிறமுடைய அரிய பொன்போல உயர் நிலையை நல்கிய; ஆருயிர்த் தோழனை விரும்பி - சிறந்த உயிரனைய தோழனைக் காண வேண்டி ; சுரும்பு உண்கண்ணிச் சுதஞ்சணன் - வண்டு தேனைப் பருகும் கண்ணியணிந்த சுதஞ்சணன் என்பவன்; விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான் - வானைக் கடந்து விரைந்து வந்து நிலமிசைத் தோன்றினான்.
|
|
|
(வி - ம்.) 'விண்அறுத்து' 'சுதஞ்சனன்' எனவும் பாடம். 'இரும்பும்' நரகருயிர்; 'பொன்' வானவர் உயிர் ; உவமை.
|
|
|
இரும்பினீர்மை கெடுத்து எரிதன்னிறத்து அரும்பொன் ஆக்கிய ஆருயிர்த் தோழன் என்னுமிதனை இந்நூல் 3107-8-ஆம் செய்யுள்களால் நன்குணரலாம். விண்ணிறுத்து - வானுலகைவிட்டு. ஒய்யென என்றது விரைவுக் குறிப்பு. இஃது அச்சுதஞ்சணன் செய்ந்நன்றியறிதலை விளக்கி நின்றது. சுதஞ்சணன் என்பது நாயாயிருந்து தேவனாகிய உயிர்க்குப் பெயரும் இஃதென்றுணர்த்தியபடியாம்.
|
( 102 ) |
வேறு
|
|
| 953 |
ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலா |
| |
வீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன் |
| |
மாசறு மணிமுடி மிடைந்த மாலையன் |
| |
பூசுறு பருதியின் பொலிந்து தோன்றினான். |
|
|
(இ - ள்.) ஓசனை நறும் புகை கமழ - ஓசனையளவு நறியபுகை மணங்கமழ; ஒண் நிலா வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன் - ஒள்ளிய நிலவைப் போல எறியும் கதிர் பரவி ஒளிரும் மெய்யினனாகவும்; மாசு அறு மணி முடி மிடைந்து மாலையன் - குற்றம் அற்ற மணிமுடியிலே நெருங்கிய மாலையனாகவும்; பூசுஉறு பருதியின் பொலிந்து தோன்றினான் - கையினாற் புனைந்த ஞாயிறு போல விளங்கித் தோன்றினான்.
|
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர், சுதஞ்சுணன் சீவகனைக் கண்ட பொழுதே வணங்கினான் எனக்கொண்டு, 'மேனியனது முடிமிடைந்த சீவகன் அப்பொழுது பருதிபோலத் தோன்றினான்' என்று பொருள் கூறுவர்.
|
|
|
அவர் கூறும் விளக்கம் :-
|
|
|
”நறும்புகை ஓரோசனை கமழா நிற்க இமைக்கும் மேனி, நிலாவை வீசி மதிபோல விளங்கும் மேனியன் - சுதஞ்ணன். அவனுடைய முடிவந்து சேர்ந்த இயல்பினையுடையான் - சீவகன் ; என்றது, இவன் ஆசிரியன் ஆதலிற் கண்டபொழுதே முடிவணங்கினான்; மேல், 'எந்தை' (சீவக- 955) ; 'அண்ணல் ஏந்தி' (மேற்படி-1158); 'காய் கதிர் சுமந்து (மேற்படி-1168) ;
|
|