பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 550 

955 சங்கவெண் மலையின் மற்றுச்
  சந்திரோ தயத்தி னுச்சி
யங்கியா னுறைவ லெந்தை
  யறிகமற் றென்று சொன்னான்.

   (இ - ள்.) குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம் வீற்று இருந்த தோளாய்! - குங்கும மலைபோலப் பருத்து அழகு குடி கொண்ட தோளனே ; எந்தாய்! - எந்தையே!; இங்கு நின் அருளின் போகி - இங்கிருந்து நின் அருளினாற் சென்று; இயக்கருள் இறைவன் ஆகி - இயக்கருக்குத் தலைவன் ஆகி ; சங்க வெண்மலையின் உச்சி - சங்க வெண்மலையின்மேல்; சந்திரோதயத்தின் - சந்திரோதயம் என்னும் நகரிலே ; அங்கு யான் உறைவல் - அங்கே நான் வாழ்கின்றேன் ; அறிக என்று சொன்னான் - அறிந்து கொள்க என்று சுதஞ்சணன் கூறினான்.

 

   (வி - ம்.) குவட்டின்: இன் : உவமப் பொருள். மற்று : இரண்டும் அசை.

 

   தோளாய்! யான் நின் அருளிற்போகி, ”இயக்கர் தலைவனாகிச் சங்கமலை உச்சியிலுள்ள சந்திரோதயம் என்னும் நகரத்திலே உறைவல்” என்றான் என்க. சங்கமலை - ஒரு மலையின் பெயர்; சந்திரோதயம் - அம்மலைக்கண் உள்ளதொரு நகரத்தின் பெயர் என்க. தன் அன்புடைமை தோன்றத் தான் பெற்றுள்ள தேவவுடம்பிற்குக் காரணனாதல் பற்றி எந்தை என்றான் என்க.

( 105 )
956 என்றவ னுரைப்பக் கேட்டே
  இமயமு நிகர்க்க லாற்றாப்
பொன்றரு மாரி வண்கைப்
  புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற
  வேந்துடை யின்ப மெல்லா
மின்றெனக் கெதிர்ந்த தென்றா
  னெரியுமிழ்ந் திலங்கும் வேலான்.

   (இ - ள்.) என்று அவன் உரைப்பக் கேட்டு - இவ்வாறு அவன் கூறக் கேட்டு; இமயமும் நிகர்க்கல் ஆற்றா - இமயமலையும் உவமைக் கொவ்வாத; பொன் தரு மாரி வண்கைப் புரவலன் - கற்பகத் தருவையும் முகிலையும் போன்ற கொடைக்கையனான; எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலினான்; புகன்று நோக்கி - விரும்பிப் பார்த்து ; வென்றவர் உலகம் பெற்ற - சித்த «க்ஷத்திரத்தைப் பெற்ற ; வேந்து உடை இன்பம் எல்லாம் - சித்தபரமேட்டிகளின் இன்பம் முற்றும்;