பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 551 

இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் - இப்போது எனக்குக் கிடைத்தது என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) இமயமும் நிகர்க்கலாற்றாப் புரவலன், பொன் தரு மாரி வண்கைப் புரவலன் எனத் தனித்தனிக் கூட்டுக. இமயமலை உலகந் தாங்குதற்குச் சீவகனுக்குக் கூறப்பட்ட மாறுபடவந்த உவமத் தோற்றம். நச்சினார்ககினியர் ் இமயமலையைப் பொன்னுக்கு அடையாக்குவர். பொன்றரு - கற்பகத்தரு. மாரி - முகில். புகன்று - விரும்பி. ஈத்துவக்கும் இன்பமே இன்பங்களுட் சிறந்தமைபற்றிச் சித்தபரமேட்டியின் இன்பத்தை உவமையாக எடுத்தான்.

( 106 )
957 சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான்
பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போல
மூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னே
யாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்.

   (இ - ள்.) சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனைச் சொன்னான் - அணிந்த கழலானுக்குச் சுதஞ்சணன் இதனைக் கூறினான்; பாடல் வண்டு அரற்றும் பிண்டிப் பகவனது இறைமைபோல - பாட்டையுடைய வண்டுகள் முரலும் அசோகின் நீழலில் அமர்ந்த முதல்வனுடைய தலைமை இவ்வுலகையெல்லாம் அகப்படுத்தினாற்போல; இவ்வுலகம் எல்லாம் மூடி - நின் இறைமையாலே இவ்வுலகெலாம் அகப்படுத்தி; ஆடியுள் பாவைபோல் - கண்ணாடியிடத்துப் பாவைபோல; நீ அணங்கியது அணங்க - பல்லுயிரும் நீ வருந்திய தொழிலுக்கு வருந்துமாறு; இன்னே நின் அடித்தருவல் என்றான் - இப்போதே நின் அடியிடத்தே தருவேன் என்றான்.

 

   (வி - ம்.) உள் - இடம்.

 

   சூடுறுகழல் - சூடுதலுற்ற வீரக்கழல் என்க. கழலினான் : சீவகன். இதனை என்றது கீழ்வருவதனை என்றவாறு. பகவன் - அருகக் கடவுள். மூடி - அகப்படுத்தி. ஆடியுட்பாவை - கண்ணாடியிற்றோன்றும் எதிர் உருவம். அணங்கியது : பெயர்; வருந்தியதற்கு என்க. ”கையும் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல” என்றார் குறுந்தொகையினும் (அ). நீ அணங்கிய தணங்க என்றதற்கு ”மன்னுயிரெல்லாம் நின்னஞ்சுமே” என்று நச்சினார்க்கினியர் காட்டிய எடுத்துக் காட்டு அவர் உரையோடு பொருந்திற்றில்லை. மன்னுயிர் எல்லாம் உடலாகவும் மன்னன் உயிராகவும் கூறப்படுதலின், உயிர் வருந்துதற்கு உடலும் வருந்துதல் போன்று நீ வருந்தியதற்கு வருந்தும் அன்புடைய உயிர்களை உடைத்தாக இவ்வுலகத்தை ஆக்கி நின்னடித் தருவல் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் வேண்டும் என்க.

( 107 )
958 வாளொடு வயவ ரீண்டி வாரணத் தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்பநின் னினைப்ப தல்லால்