| குணமாலையார் இலம்பகம் |
552 |
|
| 958 |
[னென்றான்.
|
| |
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்த லில்லாக் |
| |
கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி |
|
|
(இ - ள்.) நாளொடு பக்கம் நைந்து வீழினும் - நாட்களும் பக்கங்களும் கெட்டு வீழ்ந்தாலும்; வீழ்தல் இல்லாக் கோள் உடைக்கிழமை ஒப்பாய் - வீழுந்தன்மை இல்லாத கோள்களின் உரிமை போன்ற உரிமையுடையாய் !; வாளொடு வயவர் ஈண்டி - வீரர்கள் வாளுடன் குழுமி; வாரணத் தொழுவின் முற்றி - யானைத் தொழுவுடன் என்னை வளைத்து; மீளிமை செய்யின் - வன்மை செய்தாராயின்; வெய்ய நண்ப! - விருப்பம் ஊட்டும் நண்பனே!; நின் நினைப்பது அல்லால் - உன்னைச் சிந்திப்பதன்றி; பிறவின் குறைவு இலன் என்றான் - பிறவாற்றான் யாதும் குறைவிலேன் என்றுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) அருமை நோக்கிச், 'செய்யின்' என்றான். அங்ஙனம் மேல் வருகின்ற ஊழ் இக் கருத்தினைப் பிறப்பித்தது நின்றது.
|
|
|
இங்கு நச்சினர்ர்க்கினியர், ”முற்றி' எனவே சிறைகோடலன்றிக் கட்டுதல் இன்மை உணர்க” எனத் தாம் பின்னர்க் கூறும் உரைக்கேற்ப முன்மொழிந்து கொள்கின்றனர்.
|
( 108 ) |
| 959 |
இன்னிழ லிவரும் பூணா |
| |
னிருவிசும் பிவர்த லுற்றப் |
| |
பொன்னெழு வனைய தோளாற் |
| |
புல்லிக்கொண் டினைய கூறி |
| |
நின்னிழல் போல நீங்கே |
| |
னிடவர்வரி னினைக்க வென்று |
| |
மின்னெழூஉப் பறப்ப தொத்து |
| |
விசும்பிவர்ந் தமரன் சென்றான். |
|
|
(இ - ள்.) இன் நிழல் இவரும் பூணான் - இனிய ஒளி பரவும் கலன் அணிந்த சுதஞ்சணன் ; இரு விசும்பு இவர்தல் உற்று - பெருவானிலே செல்லக்கருதி; பொன் எழு அனைய தோளான் புல்லிக் கொண்டு - பொற்றூண் போன்ற தோளரனைத் தழுவிக்கொண்டு; நின் நிழல்போல நீங்கேன் - உன் நிழலை போல நீங்காமல் இருப்பேன்; இடர் வரின் நினைக்க என்று - நினக்குத் துன்பம்வரின் நினைந்திடுக என்று; இனைய கூறி - இவை போன்ற இனிய மொழிகளை இயம்பி; மின் எழூஉப் பறப்பது ஒத்து - மின்னல் எழுந்து பறப்பது போல; விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் - விண்ணிலே எழுந்து அச் சுதஞ்சணன் சென்றான்.
|
|