| குணமாலையார் இலம்பகம் |
553 |
|
|
(வி - ம்.) அமரனாகிய பூணான் என்க. பூணான்: சுதஞ்சணன்: தோளான்: சீவகன், எழூஉ - எழுந்து.
|
( 109 ) |
| 960 |
சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கி |
| |
யெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டா |
| |
கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்த |
| |
வெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே. |
|
|
(இ - ள்.) சொல்லிய நன்மை இல்லாச் சுணங்கன் - நன்மையென்று கூறப்பட்டவை ஒன்றும் இம்மையிற் செய்தறியாத நாய்; இவ் உடம்பு நீங்கி எல் ஒளித்தேவன் ஆகி - இம் மெய்யை விட்டு (இதற்கு முன்னர்ச் செய்த நல்வினை வந்து துணையாகி ஒருவன் கூறிய மறையினால்) பேரொளியுறும் வானவன் ஆகி; பிறக்குமோ என்ன வேண்டா - பிறக்குமோ என்று (உலகினர்) கருத வேண்டா; கொல் உலை அகத்து இட்டு ஊதி - கொல்லன் உலையிலே வைத்து ஊதி; இரதம் குத்த - (உருகின போது) இரதத்தை வார்க்க; கூர் இரும்பு எல்லை இல் செம்பொன் ஆகி. - மிக்க இரும்பு மாற்றற்ற செம்பொன் ஆகி; எரி நிறம் பெற்றது அன்றே - தீயின் நிறத்தை அடைந்தது அல்லவா? (ஆகையால்).
|
|
|
(வி - ம்.) முன், 'பெருநவை அகற்றினான்' (சீவக. 946) என்றது உருகு முகத்திற்குவமை.
|
( 110 ) |
வேறு
|
|
| 961 |
எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற் |
| |
றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுக |
| |
வருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித் |
| |
தருமாலை யல்ல தியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ. |
|
|
(இ - ள்.) எரிமாலை வேல் நுதியின் இறக்கி - எரியொழுங்கு போலும் வேலின் முனைகளான் இரணியன் முதலானோரைக் கொன்று; காமன் அடுகணையால் - (பின் காமனுக்குத் தோற்று) அவன் எய்த கணைகளினாலே; திருமாலை வெம்முலை மேல் திளைக்கும் தேவர் திருஉறுக - திருமகளின் மாலையணிந்த விருப்பமூட்டும் முலைகளின்மேல் இன்பந் துய்க்கும் திருமால் முதலான வானவர்கள் எல்லோரும் செல்வம் எய்துக; அருமாலை எண் வினையும் நீக்கி - நீக்குதற்கரிய எண் வினைகளையும் நீக்கி; இன்பக் கடல் ஆக்கி -வீட்டின்பத்தை உண்டாக்கி; தரும் மாலை அல்லது - தரும் அருகனை அல்லாமல்; யான் தலையின் தாழ்ந்து பணி வேனோ? - நான் தலையினால் தாழ்ந்து வணங்குவேனோ ?
|
|