| குணமாலையார் இலம்பகம் |
555 |
|
| 963 |
மைத்தலை நெடுங்க ணாரு |
| |
மைந்தரு மறலி யாட |
| |
மொய்த்திரள வன்ன மார்க்கு |
| |
மோட்டிரும் பொய்கை புக்கார். |
|
|
(இ - ள்.) இவர்கள் இத்தலை ஏக-சீவகனும் தோழர்களும் இங்கிருந்து செல்ல; மைத்தலை நெடுங்கணாரும் மைந்தரும் - மைதீட்டிய நெடுங்கண் மகளிரும் மைந்தரும்; அத்தலை இமயம் நட்டு அரவு சுற்றி - அக் காலத்தே இமயத்தை நட்டுப் பாம்பைச் சுற்றி; முந்நீர் அலறக் கடைந்தவர் அரவம் ஒப்ப - கடல் அலறுமாறு கடைந்தவர்களின் ஆரவாரம் போல; மறலி ஆட - மாறு பட்டு ஆடுதற்கு; இள அன்னம் மொய்த்து ஆர்க்கும் - இளமையான அன்னங்கள் மொய்த்து ஆரவாரிக்கும்; மோட்டு இரும்பொய்கை புக்கார் - மேன்மையான பெரிய பொய்கையை அடைந்தனர்.
|
|
|
(வி - ம்.) மந்தரத்தின் தொழிலை இமயத்துக் கேற்றினார், அது மலையரையன் ஆதலின்; இமயவில் வாங்கிய' (கலி. 38) என்றார் பிறரும்; (மேருவின் தொழிலை இமயத்திற் கேற்றுதல்) அத்தலை - அக்காலத்து.
|
( 113 ) |
| 964 |
கலந்தெழு திரைநுண் ணாடைக் |
| |
கடிக்கய மடந்தை காம |
| |
ரிலங்குபொற் கலாபத் தல்கு |
| |
லிருகரைப் பரப்பு மாக |
| |
வலர்ந்ததண் கமலத் தம்போ |
| |
தணிதக்க முகத்திற் கேற்ப |
| |
நலங்கெழு குவளை வாட்க |
| |
ணன்னுத னலத்தை யுண்டார். |
|
|
(இ - ள்.) இருகரைப் பரப்பும் - இருகரை யிடமும் ; காமர் இலங்கு பொன் கலாபத்து அல்குல் ஆக - அழகிய விளக்கமுற்ற பொன் மேகலை அணிந்த அல்குலாகவும் ; கலந்து எழுதிரை நுண் ஆடை - அதிலே கலந்து எழுகின்ற அலையாகிய நுண்ணிய ஆடையினையும்; அலர்ந்த தண்கமலத்து அம்போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப - மலர்ந்த தண்ணிய தாமரைப் போதாகிய அழகிய முகத்திற்குத்தக; நலம் கெழுகுவளை வாள்கண் - அழகு பொருந்திய குவளையாகிய வாட்கண்ணினையும் உடைய; கடிக்கய மடந்தை காமர் நன்னுதல் நலத்தை உண்டார் - மணமுறுங் கயமாகிய மடந்தையாகிய அழகிய நன்னுதலாளின் நலத்தைப் பருகினர்.
|
|