பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 556 

   (வி - ம்.) 'அணிதக்க குவளை வாட்கண்' என்று கூட்டி, 'ஏற்ப' என்னும் எச்சம் தக்க என்னும் வினைகொண்டது என்பர் நச்சினார்க்கினியர்.

 

   இந் நூலாசிரியர் கலைபயிலுதல் அரசு கட்டிலேறுதல் முதலியவற்றையும் திருமணமாகக் கூறும் தம் வழக்கத்திற்கேற்பவே ஈண்டும் புனலாட்டின்பத்தையும் மகளிர் போகமாகவே கூறுகின்றார். கடிக்கய மடந்தை - மணமுடைய குளமாகிய நங்கை. கலாபம் - ஓர் அணிகலன். அணிதக்க முகம் - அழகு வீற்றிருத்தற்கு ஏற்ற முகம். நன்னுதல் : அன்மொழி.

( 114 )
965 தண்ணுமை முழவு மொந்தை
  தகுணிச்சம் பிறவு மோசை
யெண்ணிய விரலோ டங்கை
  புறங்கையி னிசைய வாக்கித்
திண்ணிதிற் றெறித்து மோவார்
  கொட்டியுங் குடைந்து மாடி
யொண்ணுதன் மகளிர் தம்மோ
  டுயர்மிசை யவர்க ளொத்தார்.

   (இ - ள்.) தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் - தண்ணுமை முதலியவற்றின் ஓசைகளையும்; பிறவும் எண்ணிய ஓசை - மற்றும் எண்ணி கருவிகளின் ஓசைகளையும்; விரலோடு அங்கை புறங் கையின் இசைய - விரலாலும் உள்ளங்கையாலும் புறங்கையாலும் பொருந்துமாறு; திண்ணிதின் தெறித்தும் கொட்டியும் குடைந்தும் ஆக்கி - உறுதியாகத் தெறித்தும் தட்டியும் கலக்கியும் நீரிலே பிறப்பித்து; ஓவார் - ஒழிவிலராய்; ஒண் நுதல் மகளிர் தம்மோடு ஆடி - ஒள்ளிய நெற்றியையுடைய மகளிருடன் ஆடி ; உயர்மிசை யவர்கள் ஒத்தார் - வானலகத்த வரைப் போன்றனர் ஆடவர்கள்.

 

   (வி - ம்.) தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் என்பன இசைகருவிகள். உயர்மிசையவர்கள் - வானவர். இன்ப நுகர்ச்சிக்கு வானவர் உவமை.

( 115 )
966 சிவிறியின் மாறு தூயுங்
  குங்கும மெறிந்துந் தேங்கொ
ளுவறுநீ ருழக்கி யோட்டி
  யுடைபுறங் கண்டு நக்குத்
தவறெனத் தாமம் பூட்டித்
  தருதிறை கொண்டு மின்பத்
திவறினார் காம வெள்ளத்
  தேத்தருந் தன்மை யாரே.