| குணமாலையார் இலம்பகம் |
558 |
|
|
(இ - ள்.) விண்ணிடை நுடங்கும் மின்னும் மீன்களும் போருவ போல - வானிலே அசையும் மின்கொடியும் மீன்களும் தம்மிற் பொருவன போல; வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி - அழகிய ஒள்ளிய சுண்ணப் பொடியையும் பட்டையும் மாலையையும் சாந்தையும் ஏந்தி ; எண் அருந் திறந்து மைந்தர் - எண்ணற்கரிய ஆடவர்கள்; எதிர் எதிர் எறிய - (மகளிரின்) எதிரே எதிரே; மண் இடை அமரர்
|
|
| 968 |
கலிவளர் களிறு கைந்நீர் |
| |
சொரிவபோன் முத்த மாலை |
| |
பொலிவொடு திவண்டு பொங்கிப் |
| |
பூஞ்சிகை யலமந் தாடக் |
| |
குலிகநீர் நிறைந்த பந்திற் |
| |
கொம்பனா ரோச்ச மைந்தர் |
| |
மெலிவுகண் டுவந்து மாதோ |
| |
விருப்பொடு மறலி னாரே. |
|
|
(இ - ள்.) முத்த மாலை பொலிவொடு திவண்டு பொங்கி - முத்துமாலை அழகுற அசைந்து பொங்க; பூஞ்சிகை அலமந்து ஆட - பின்னின மயிர் சுழன்று அசைய; கொம்பனார் - பெண்கள்; கலிவளர் களிறு கை நீர் சொரிவ போல் - தழைத்து நீண்ட, களிற்றின் துதிக்கை நீரைச் சொரிவனபோல ; குலிக நீர் நிறைந்த பந்தின் - செங்குலிக நீர் நிறைந்த மட்டத் துருத்தியினால்; ஓச்ச - நீரை வீசி; மைந்தர் மெலிவு கண்டு உவந்து - ஆடவரின் சோர்வு கண்டு மகிழ்ந்து; விருப்பொடு மறலினார் - (மேலும்) விருப்பத்துடன் மாறுபட்டார்.
|
|
|
(வி - ம்.) பொங்கி - பொங்க: எச்சத்திரிபு. மாது, ஓ : அசைகள்.
|
|
|
கலிவளர் களிறு என்றதற்குச் செருக்கு மிகாநின்ற களிறு எனலுமாம். குலிகம் - சாதிலிங்கம். பந்து, இதுவுமோர் வகைத்துருத்தி ; இதனை மட்டத்துருத்தி என்பர்.
|
( 118 ) |
| 969 |
வண்ணவொண் சுண்ணம் பட்டு |
| |
மாலையுஞ் சாந்து மேந்தி |
| |
யெண்ணருந் திறத்து மைந்த |
| |
ரெதிரெதி ரெறிய வோடி |
| |
விண்ணிடை நுடங்கு மின்னு |
| |
மீன்களும் பொருவ போல |
| |
மண்ணிடை அமரர் கொண்ட |
| |
மன்றலொத் திறந்த தன்றே. |
|