பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 562 

பருதியின் முன்னர்த் தோன்றா - கதிரவன் முன்னே தோன்றாதனவாய்; மறைந்த பன்மீன்கள் ஒத்தார் - மறைந்த பல விண்மீன்களைப் போன்றனர்.

 

   (வி - ம்.) மிசை - இடம். இது போகாமல் நின்ற நிலையிலே மறைந்ததற்குவமை.

 

   மக்களைக் குத்திக்கொன்றதென்பது தோன்றக் குருதிகொள் மருப்பிற்றாகி என்றார். குஞ்சரம் - யானை. தோன்றா : பலவறிசொல் ; தோன்றாதவனவாய் என்க.

( 124 )
975 கருந்தடங் கண்ணி தன்மேற்
  காமுக ருள்ளம் போல
விருங்களி றெய்த வோடச்
  சிவிகைவிட் டிளைய ரேக
வரும்பெற லவட்குத் தோழி
  யாடவ ரில்லை யோஎன்
றோருங்குகை யுச்சிக் கூப்பிக்
  களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள்.

   (இ - ள்.) கருந் தடங்கண்ணி தன்மேல் - கரிய பெரிய கண்ணாளாகிய குணமாலையின் மேல்; காமுகர் உள்ளம் போல - காமுகர் உள்ளம் செல்வது போல; இருங்களிறு எய்த ஓட - பெரிய களிறு நோக்கமுற்றோட; சிவிகை விட்டு இளையர் ஏக - பல்லக்கை விட்டுப் பணியாளரும் ஓடிவிட்டதால்; அரும் பெறல் அவட்குத் தோழி - பெறுதற்கரிய அவளுக்குத் தோழியானவள்; ஆடவர் இல்லையோ என்று - ஆடவர் யாரும் இங்கிலையோ என்று கூவி; உச்சி கை ஒருங்கு கூப்பி - உச்சியிலே கைகளை ஒன்றாகக் குவித்து; களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் - யானையின் எதிரே வணங்கி நின்றாள்.

 

   (வி - ம்.) 'கார் விரி மின்னனார் மேற் காமுகர் நெஞ்சின் ஓடும் தேர் பரி கடாவி' (சீவக. 442) என முன்னரும் இவ்வுவமை வருதல் காண்க.

 

   கண்ணி - ஈண்டுக் குணமாலை. இளையர் - சிவிகை காவுவோர். அரும்பெறலவள் - குணமாலை.

( 125 )
976 என்னைக்கொன் றிவள்க ணோடு
  மெல்லையி லொருவன் றோன்றி
யின்னுயி ரிவளைக் காக்கு
  மன்றெனி லென்கண் மாய்ந்தாற்