| குணமாலையார் இலம்பகம் |
563 |
|
| 976 |
பின்னைத்தான் ஆவ தாக |
| |
வென்றெண்ணிப் பிணைக ணோக்கி |
| |
மின்னுப்போ னுடங்கி நின்றாள் |
| |
வீததை பொற்கொம் பொப்பாள். |
|
|
(இ - ள்.) என்னைக் கொன்று இவள்கண் ஓடும் எல்லையில் - என்னை இக்களிறு கொன்று இவளிடம் ஓடும்போது; ஒருவன் தோன்றி - ஒருவன் வந்து; இவள் இன்னுயிரைக் காக்கும் - இவளுடைய இனிய உயிரைக் காப்பான்; அன்று எனில் - இல்லையென்றால்; என்கண் மாய்ந்தாற் பின்னைத்தான் ஆவது ஆக - என்கண் இறந்தாற் பிறகு ஆவது ஆகுக; என்று எண்ணி - என நினைந்து (நிற்க); பிணைகொள் நோக்கி - மானோக்கினாள் ஆகிய; வீததை பொன் கொம்பு ஒப்பாள் - மலர்கள் செறிந்த பொற்கொடி போன்ற குணமாலை ; மின்னுப்போல் நுடங்கி நின்றாள் - மின்னைப்போல் ஒசிந்து நின்றாள்.
|
|
|
(வி - ம்.) எண்ணி - எண்ண, 'ஒருவன்' என்பது உட்கோளாதலின், 'ஆடவர்' எனப் பன்மையாற் கூறினாள்.
|
|
|
நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் (975) இதனைப் பிணைத்துக், 'குணமாலை தன்மேற் களிறு ஓடிவருதலைக் கண்டு இறைஞ்சி மின்னுப் போல் நுடங்கி நின்றாள்' என்றும், தோழி மேற்கூறியவாறு எண்ணிக் களிற்றின்முன் கைகுவித்து நின்றாள் என்றும் முன்பின்னாக மாற்றியுரைப்பர்.
|
|
|
மேல், 'நெடுங்கணாற் கவர்ந்தகள்வி - அஞ்சனத் துவலையாடி நடுங்கினாள்' 'நாட்டமும் நடுக்கமும் (சீவக- 1024, 1003) என வருவதால், 'மின்னுப் போல் நுடங்கி நின்றாள்' குணமாலையாகக் கொள்ளவேண்டியுள்ளது. அதன் பொருட்டே 'எண்ணி 'என்பதை, 'எண்ண' எனத் திரிக்க வேண்டியுள்ளது. இது நச்சினார்க்கினியர்க்குடன்பாடேயாகும்.
|
( 126 ) |
| 977 |
மணியிரு தலையுஞ் சோ்த்தி வான்பொனி னியன்ற நாணா |
| |
லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து |
| |
தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் |
| |
பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். |
|
|
(இ - ள்.) பணிவருங் குருசில் - பிறரைப் பணிதலில்லாத சீவகன்; மணி இருதலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் - இரு முனைகளினும் மணியைச் சேர்த்துச் சிறந்த பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றினால்; அணி இருங் குஞ்சி ஏறக் கட்டியிட்டு - அழகிய கரிய குஞ்சியைச் சேர்த்துக்கட்டி; அலங்கல் சூழ்ந்து - மாலையை அதன்மேற் சுற்றி ; தணிவு அருந்தோழர் சூழ - அன்பு குறைதல் அறியாத தோழர்கள் சூழ்ந்துவர
|
|