| குணமாலையார் இலம்பகம் |
564 |
|
|
தாழ்குழை திருவில் வீச - தாழ்ந்த குழை வானவில்லென ஒளி சொரிய; செல்வான் பாவையது இடரைக் கண்டான்-செல்பவன் குணமாலையின் துன்பத்தைக் கண்டான்.
|
|
|
(வி - ம்.) கட்டியிட்டு : ஒரு சொல், 'குழல் , யேறக்கட்டி' என்றும் பாடம்.
|
|
|
வான்பொன் - சிறந்த பொன். இருங்குஞ்சி - கரிய மயிர். தணிவரும் என்புழி அன்பு தணிதலில்லாத என வருவித்தோதுக. குழை - குண்டலம். தாழ்குழை : வினைத்தொகை. குருசில் - தலைமைத் தன்மையுடைய சீவகன். பாவை : குணமாலை.
|
( 127 ) |
| 978 |
பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத |
| |
லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா |
| |
வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா |
| |
வண்ணலங் களிற்றை வையா ஆர்ததுமே லோடினானே. |
|
|
(இ - ள்.) பெருந்தகை பெண்ணுயிர் அவலம் நோக்கி - பெருந்தகையான சீவகன் ஒரு பெண்ணின் உயிர் இறந்துபடுதல் கண்டு ; வாழ்வின் சாதல் எண்ணினன் - வாழ்வதினும் சாதல் மேலென எண்ணினான் ; எண்ணி நொய்தா இனம் மலர்மாலை சுற்றா - எண்ணிக் கடிதாக இனமலர் மாலைகளைச் சுற்றி; வண்ணப் பொன் கடகம் ஏற்றா - அழகிய பொற்கடத்தை மேலே ஏற்றி; வார் கச்சில் தானை வீக்கா-நீண்ட கச்சினால் ஆடையை இறுக்கி; அண்ணல் அம் களிற்றை வையா - பெருமை தங்கிய களிற்றை வைது; ஆர்த்து மேல் ஓடினான் - ஆர்ப்பரித்துக் களிற்றின்பால் ஓடினான்.
|
|
|
(வி - ம்.) 'வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன்' (சீவக. 649) ஆதலால், இக்களிறு அடர்க்க எளிதாயினும். அடர்த்தாற் கட்டியங்காரற்கும் நமக்கும் வேறுபாடு பிறக்கு மென்றெண்ணி, முதலில் அதனை அடக்காது சென்றானெனினும், பெண்ணுயிர் அவலப்படுதல் கண்டு, அவ் வேறுபாடு, இவள் இறந்து படுதல் கண்டு போதலினும் நன்றென்று கருதினான்; அக்களிற்றை அடர்ப்பதால் இறப்பு நேரினும் ஏற்கவும் எண்ணனின்.
|
( 128 ) |
| 979 |
குண்டலங் குமரன் கொண்டு |
| |
குன்றின்மேல் வீழு மின்போ |
| |
லொண்டிறற் களிற்றி னெற்றி |
| |
யெறிந்துதோ டொலித்து வீழ |
| |
மண்டில முத்துந் தாரு |
| |
மாலையுங் குழலும் பொங்க |
| |
விண்டலர் கண்ணி சிந்த |
| |
மின்னிற்சென் றெய்தி னானே. |
|