| குணமாலையார் இலம்பகம் |
565 |
|
|
(இ - ள்.) குமரன் குண்டலம் கொண்டு - (ஓடிய) குமரன் (தான் செல்வதற்கு முன்னே களிறு தாழாதவாறு) காதின் குண்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; குன்றின்மேல் வீழும் மின்போல் - மலையின்மேல் விழும் மின்னல்போல ; ஒண்திறல் களிற்றின் நெற்றி எறிந்து - பெருந்திறல் படைத்த யானையின் நெற்றியிலே வீசி; தோடு ஒலித்து வீழ - தோடு ஒலியுடன் வீழ; மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க - வட்டமான முத்து வடமும் தாரும் மாலையும் சிகையும் பொங்கி நிற்க; விண்டு அலர் கண்ணி சிந்த -முறுக் கவிழ்ந்து மலர்ந்த கண்ணி விழ ; மின்னின் சென்று எய்தினான் - மின்னுப் போலப் போய்ச் சேர்ந்தான்.
|
|
|
(வி - ம்.) தோடு தானே, 'குண்டலம் எறிந்த விசையில்' வீழ்ந்தது. தார், கண்ணி, மாலை என்பற்றின் வேறுபாடுணர்க.
|
( 129 ) |
| 980 |
படம்விரி நாகஞ் செற்றுப் |
| |
பாய்ந்தரு கலுழன் போல |
| |
மடவர லவளைச் செற்று |
| |
மதக்களி றிறைஞ்சும் போழ்திற் |
| |
குடவரை நெற்றி பாய்ந்த |
| |
கோளரி போன்று வேழத் |
| |
துடல்சினங் கடவக் குப்புற் |
| |
றுருமென வுரறி யார்த்தான். |
|
|
(இ - ள்.) படம் விரி நாகம் செற்றுப் பாய்தரு கலுழன் போல - படம் விரிந்த நாகத்தைச் சினந்து பாயுங் கருடனைப் போல; மடவால் அவளைச் செற்று - முன்பு நின்ற மாலையென்னும் மடவரலாகிய அவளைச் சீறி ; மதக்களிறு இறைஞ்சும் போழ்தில் - மதயானை தாழும் அளவில்; குடவரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று - மேலைமலை உச்சியிலே தாவிய கொலைவல்ல சிங்கம் போல; வேழத்து உடல் சினம் கடவக் குப்புற்று - களிற்றின் கொல்லுஞ் சீற்றம் பொங்குமாறு அதன் நெற்றியிலே குதித்து; உரும் என உரறி ஆர்த்தான் - இடி போல முழங்கி ஆர்த்தான்.
|
|
|
(வி - ம்.) குடவரை யானை நெற்றியிலுள்ள புள்ளிக்குவமை.
|
|
|
செற்று இரண்டும் சினந்து என்னும் பொருளன. கலுழன் - கருடன். மடவரலவளை என்றது, தோழியை. இறைஞ்சுதல் கோட்டாற் சூத்திக் கொல்லுதற்குக் குனிதல். குடவரை - யானையின் மத்தகத்திற்குவமை. கோள் அரி-கொலைத் தொழிலையுடைய சிங்கம்: இது சீவகனுக்குவமை. உடல் சினம் : வினைத்தொகை. குப்புறுதல் - குதித்தல். உரறுதல் - முழங்குதல்.
|
( 130 ) |