பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 566 

981 கூற்றென முழங்கிக் கையாற்
  கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து
காற்றென வுரறி நாகங்
  கடாம்பெய்து கனவிற் சீறி
யாற்றலங் குமரன் றன்மே
  லடுகளி றோட லஞ்சான்
கோற்றொடிப் பாவை தன்னைக்
  கொண்டுயப் போமின் என்றான்.

   (இ - ள்.) கூற்று என முழங்கி - (சீவகன்) காலனைப் போல ஆர்த்து; கையால் கோட்டிடைப் புடைப்ப - கையினாலே கொம்புகளின் இடையிலே தாக்கலின்; நாகம் காய்ந்து காற்று என உரறி - யானை சினந்து காற்றைப் போல முழங்கி; கடாம் பெய்து - மதம் பொழிந்து; கனலின் சீறி - நெருப்பெனப் பொங்கி; ஆற்றல் அம் குமரன் தன்மேல் - ஆற்றலையும் அழகையுமுடைய சீவகன் மேலே; அடுகளிறு ஓட அஞ்சான் - அக்கொல்யானை ஓட அதற்கு அஞ்சாதவனாய்; கோல் தொடிப் பாவைதன்னைக் கொண்டு உயப்போமின் என்றான் - திரண்ட வளையல் அணிந்த குணமாலையை உயிர் பிழைக்கக் கொண்டுபோயின் என்று (அருகிந்தோரிடம்) கூறினான்.

 

   (வி - ம்.) சேடி மேலும் குணமாலை மேலும் செல்வது கண்டு அஞ்சினவன் தன்மேல் வருவது கண்டு அச்சம் நீங்கினாள். தலைமை பற்றிக் குணமாலையைக் கொள்க.

( 131 )
982 மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப்
பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பெற்றார்க்
கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே.

   (இ - ள்.) மதியினுக்கு இவர்ந்த வேக மாமணி நாகம் - திங்களைப் பற்றச் சென்ற விரைவுடைய, மாணிக்கங்கொண்ட கரும்பாம்பு; வல்லே பதி அமை பருதி தன்மேல் படம் விரித்து ஓடி யாங்கு-விரைந்து, தன் இடம் விட்டுச் செல்லும் ஞாயிற்றின் மீது படத்தை விரித்துக்கொண்டு ஓடினாற்போல; பொதி அவிழ்கோதை தன்மேல் பொரு களிறு - கட்டவிழ்ந்த மலர் மாலையாள் குணமாலையின்மேற் சென்ற போர்க்களிறு; அகன்று - (அவளைக்) கைவிட்டு; பொன் தார்க் கதிஅமை தோளி னானை - தன்மேல் வந்த பொன்மாலை அணிந்த, தோளையுடைய சீவகனை கை அகப்படுத்தது - கைப் பற்றியது.