| குணமாலையார் இலம்பகம் | 
567  | 
 
  | 
 
| 
    (வி - ம்.) அன்று, ஏ : அசைகள், பதிய்மை பருதி : அமைதல் ; தவிர்தல், 'அமைந்த தினிநின் தொழில்' (கலி- 82) என்றது போல - 'கதி அமை தேரினானை' என்றும் பாடம். 
 | 
( 132 ) | 
 
 
|  983 | 
கையகப் படுத்த லோடுங் |  
|   | 
  கார்மழை மின்னி னொய்தா |  
|   | 
மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் |  
|   | 
  மருப்பிடைக் குளித்துக் காற்கீ |  
|   | 
ழையென வடங்கி வல்லா |  
|   | 
  னாடிய மண்வட் டேய்ப்பச் |  
|   | 
செய்கழற் குருசி லாங்கே |  
|   | 
  கரந்துசே ணகற்றி னானே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கை அகப்படுத்த லோடும் - கைப்பற்றியவுடன்; செய்கழல் குருசில் - கழலணிந்த சீவகன்; கார் மழை மின்னின் நொய்தா - கரிய முகிலிடை மின்னினும் விரைந்து; மொய் கொளப் பிறழ்ந்து - வலிமையுண்டாகும்படி உடம்பைப் புரட்டி; முத்துஆர் மருப்பிடைக் குளித்து - முத்தினையுடைய கொம்பிடையிலே புகுந்து; வல்லான் ஆடிய மணிவட்டு ஏய்ப்ப - வல்லவன் உருட்டிய மணிவட்டைப்போல; கால்கீழ் ஐ என அடங்கி - காலின்கீழ் வியப்புற அடங்கி; கரந்து - மறைந்து ; செண் அகற்றினான் - சேய்மையிலே நீக்கினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கார் மழை - கரிய முகில். நொய்தா, நொய்து ஆக: ஈறுகெட்டது. மொய் - வலிமை. கண்டோர் ஐ என்று வியக்கும்படி என்க. யானையின் காற்கீழ்க் கரந்திருந்தே அதனைத் துன்புறுத்தி அதனை அவ்விடத்தினின்றும் ஓட்டினான் என்பது கருத்து. 
 | 
( 133 ) | 
 
 
|  984 | 
மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் |  
|   | 
கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் |  
|   | 
செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் |  
|   | 
பில்கும் மும்ம தவேழம் பெயர்ந்ததே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) பில்கும் மும்மத வேழம் - துளிக்கும் மும்மதமுடைய அசனிவேகம்; மல்லல் நீர் மணி வண்ணனை - கடல் நீரும் நீலமணியும் போன்ற நிறமுடைய கண்ணபிரானை; பண்டு ஒர் நாள் கொல்ல ஓடிய குஞ்சாரம் போன்றது - முன்னொரு நாள் கொல்ல ஓடிய குவலயாபீடம் என்னும் யானையைப் போன்றது; சீவகன் அச் செல்வன் போன்றனன்-சீவகனும் அக் கண்ணனைப் போன்றான் ; தெய்வம்போற் பெயர்ந்தது-அக் களிறு (குவலயா பீடமாக வந்த) தெய்வத்தைப் போலவே தன்னிலையிலே திரும்பியது. 
 | 
  |