| குணமாலையார் இலம்பகம் |
568 |
|
|
(வி - ம்.) பகையன்மையின் இவன் விலங்கிற்கும் உயிர் அளித்தான். கண்ணன் தனக்குப் பகையாதலிற் கொன்றான். 'தெய்வம் போற் பெயர்ந்தது' என்றதனாற், கண்ணன் குவலயா பீடத்தைக் கொல்லாது விட்டிருப்பின் அதுபோலுமென இல்பொருளுவமையாகக் கொள்க. குவலாய பீடத்தைக் கொல்லாது விட்டதாகவும், அதனாற் கண்ணணுக்குக் 'கரிவரதன்' என்று பெயர் வந்ததென்றும் ஸ்ரீ புராணத்தில், 22ஆம் தீர்த்தங்கரர் புராணத்திற் கூறப்பட்டிருப்பதாகக் கூறுவாரும் உளர். கஞ்சனுக்காகத் தெய்வமே யானையாய் வருதலின், 'தெய்வம்' என்றார்.
|
( 134 ) |
வேறு
|
|
| 985 |
ஒருகை யிருமருப்பின் மும்மதத்த |
| |
தோங்கெழிற்குன் றனைய வேழந் |
| |
திருகு கனைகழற்காற் சீவகன்வென் |
| |
றிளையாட்கு டைந்து தேனார் |
| |
முருகு கமழலங்கன் முத்திலங்கு |
| |
மார்பினனைஞ் ஞூற்று நால்வ |
| |
ரருகு கழல்பரவத் தனியேபோ |
| |
யுய்யான மடைந்தா னன்றே. |
|
|
(இ - ள்.) ஒருவகை இருமருப்பின் மும்மதத்தது - ஒரு துதிக்கையும் இரு கொம்புகளும் மும்மதமும் உடைய; ஓங்கு எழிற்குன்று அனைய வேழம்-உயர்ந்த அழகிய குன்றைப்போன்ற களிற்றினை; திருகு கனைகழல்கால் சீவகன் வென்று - முறுக்கிய ஒலியையுடைய கழலணிந்த காலையுடைய சீவகன் வெற்றி கொண்டு; இளையாட்கு உடைந்து - குணமாலைக்குத் தன் அறிவு முதலியன தோற்று; தேன் ஆர் முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் - வண்டுகள் நிறைந்த, மணங்கமழும் அலங்கலும் முத்து வடமும் விளங்கும் மார்பினனாய்; ஐஞ்ஞூற்று நால்வர் அருகு கழல்பரவ - ஐஞ்ஞூற்று நான்கு தோழர்களும் அருகிருந்து அடியை வாழ்த்தச் சென்று (பிறகு பிரிந்து); தனியே போய் உய்யானம் அடைந்தான் - தனியே சென்று தன் அரண்மனைப் பொழிலை அடைந்தான்.
|
|
|
(வி - ம்.) தத்தை தன் வேறுபாட்டை அறியலாகாதென்று பொழிலிற் புகுந்தான்.1.
|
|
|
|
1. இதன் பின்னர், மூலமட்டுமுள்ள சில பிரதிகளிலுள்ள செய்யுள்:
|
|
|
”ஆடவர்க் கூட அனங்க னும்மதி
|
|
|
வாடிய வாட்க ணிரைத்தலும் வார்குழைச்
|
|
|
சேடியர் கைதொழத் தேற்றிய ஒண்சுடர்
|
|
|
ஊடிய மாடம் ஒளியிழை புக்காள்.”
|
|