| குணமாலையார் இலம்பகம் | 
571  | 
 
  | 
 
 
|  990 | 
கடம்பு சூடிய கன்னி மாலைபேற் |  
|   | 
றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் |  
|   | 
குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு |  
|   | 
ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கடம்பு சூடிய கன்னி மாலைபோல் -கடம்பிலே பூத்த புதிய மாலைபோல; தொடர்ந்து கைவிடாத் தோழிமாரொடும் - தொடர்ப்பட்டுக் கைவிடாத தோழியரோடும்; குடங்கை உண்கணாள் - உள்ளங்கை யளவாகிய மையுண்ட கண்ணாள் ; கொண்ட பண்ணையுள் - ஆடிய விளையாட்டில்; அடைந்த துன்பம் என்று - மிகுதியால் வந்த வருத்தம் என்று ; அறிவின் நாடினாள் - அறிவினால் ஆராய்ந்தாள். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) சுரமஞ்சரியும் குணமாலையும் கன்னியாராதலிற் 'கன்னி மாலை' என்றார். 'கண்ணி மாலை' பாடம் எனின், கண்ணிகட்டினற் போலும் மாலையாம். 
 | 
( 140 ) | 
 
 
|  991 | 
கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் |  
|   | 
விம்மப் பல்கலம் நொய்ய மெய்யணிந் |  
|   | 
தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் |  
|   | 
கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கொடி அனாளை - கொடியனைய குணமாலையை (க்கோலஞ் செய்யும் மகளிர்) கம்மம் பல்கலம் களைந்து - வேலைப்பாடமைந்த பல கலங்களையும் நீக்கி; கண் தெறூஉம் நொய்யப் பல்கலம் விம்ம மெய்அணிந்து - கண்ணைப் பறிக்கும் நொய்யனவாகிய பல அணிகளை மிகுதியாக அவள் உடம்பிற் பூட்டி; அம்மென் மாலையும் அடைச்சி - அழகிய மெல்லிய மலர்மாலைகளையும் அணிந்து ; கொம்மை குங்குமம் மட்டித்தார் - முலைமிசை குங்குமத்தையும் பூசினர். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) உடல் நுணுகுதலுணர்ந்து நொய்யவற்றை விம்ம அணிந்தார். புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவு பிறத்தலின், 'இது 'புறஞ்செயச் சிதைதல்' என்னும் (தொல். மெய். 18. பேர்) மெய்ப்பாடு. மென்மாலை : கழுநீர்மலை. கொம்மை : ஆகுபெயர். 
 | 
  | 
 
| 
    கம்ம - தொழில். நொய்யகலம் அணிந்தென்றமையால், வன்மையுடைய பலவாகிய கலன்களையும் களைந்து என்க. அடைச்சி - சூட்டி, கொம்மை - முலைக்குப் பண்பாகுபெயர். மட்டித்தல் - பூசுதல். 
 | 
( 141 ) | 
 
 
|  992 | 
அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் |  
|   | 
கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் |  
|   | 
பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி |  
|   | 
செம்பொற் கொம்பினெம் பாவை செல்கின்றாள். | 
 
 
 |