பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 572 

   (இ - ள்.) அம்பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் - அழகிய பொற் கிண்ணத்திலே பாலை யெமக் கூட்டுகின்ற; எம்கொம்பின் அவ்வையைச் சென்று கொணர்க என - எம், கொம்பனைய அன்னையைப் போய் அழைத்து வருக என்று; பைம்பொன் அல்குலைப் பைங்கிளி பயிரும் - பசிய மேகலை யணிந்த அல்குலையுடைய நின்னை நின் பச்சைக்கிள்ளை கூப்பிடும்; செம்போன் கொம்பின் எம்பாவை செல்க என்றாள் - செம்போற் கொடி போன்ற எம்பாவையே! இனி நீ அங்குச் செல்க என்று விநயமாமலை கூறினாள்.

 

   (வி - ம்.) பைம்பொன் அல்குலை என்பதும் பாவை என்பதும் முன்னிலைப் புறமொழி. பயிர்தல் - அழைத்தல்.

( 142 )

வேறு

 
993 நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற்
றிறத்தை வெளவிய சேயரிக் கண்ணினாள்
பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம்
வெறுத்தி யாவையும் மேவல ளாயினாள்.

   (இ - ள்.) நிறத்து எறிந்து பறித்த நிணம்கொள் வேல் திறத்தை - மார்பில் எறிந்து (சிறிது நின்று) வாங்கிய நிணம் பொருந்திய வேலின் தன்மையை; வெளவிய சேய் அரிக் கண்ணினாள் - கவர்ந்த சிவந்த வரிபரந்த கண்ணாளாகிய குணமாலை; பிறப்பு உணர்ந்தவர்போல் - பிறப்புத் தீதெனக் கண்டு பற்றற்றாரைப் போல; தமர் பேச்சு எலாம் வெறுத்து - உறவினர் மொழியை எல்லாம் கைவிட்டு; யாவையும் மேவலள் ஆயினாள் - உணவு முதலியவற்றை யெல்லாம் விரும்பாதவளானாள்.

 

   (வி - ம்.) 'தமர் பேச்சு எலாம் வெறுத்து' என்னுவரை, 'புலம்பித் தோன்றல்' என்னும் மெய்ப்பாடு ; செய்த கோலந் துணையொடு கழியப் பெறாதே அழிந்து, சுற்றத்திடையும் தனியே தோற்றுதலின். 'மேவலள் எனவே, 'இன்பத்தை வெறுத்த'லும், 'பசியட நிற்ற'லும் மெய்யப்பாடு; (தொல். மெய். 22-பேர்.)

 

   பிறப்புணர்ந்தவர் என்றது, ”பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்” என்னும் உண்மையை உணர்ந்து பற்றுறுத்தோர் என்பது படநின்றது.

( 143 )
 994 குமர னாகிய காதலிற் கூறினாள்.
  யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற்
  டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை
  குமரி மாநகர்க் கோதையங் கொம்பனா