| குணமாலையார் இலம்பகம் |
573 |
|
|
(இ - ள்.) கோதை அம் கொம்பு அனாள் - மலர்க் கோதையையுடைய அழகிய கொம்பு போன்றவள்; குமரி மாநகர் - கன்னிமாடத்திலே; தமரின் நீங்கிய செவ்வியுள் - உறவினரை நீங்கித் தனித்த காலத்திலே; அமரர் மேவரத் தாமரை தோன்றிய அண்ணல் போல் - வானவர் வேண்டத் தாமரையிலே தோன்றிய முருகனைப் போன்ற; குமரன் ஆக்கிய காதலின் கூறினாள் - சீவகன் உண்டாக்கிய காதலாலே சில கூறினாள்.
|
|
|
(வி - ம்.) குமரிமாநகர் என்றது கன்னி மாடத்தை. கொம்பனாள் : குணமாலை. அண்ணல் : முருகன் - முருகக் கடவுள் தாமரையிற்றோன்றியதனை,
|
|
| |
”நிவந்தோங்(கு) இமயத்து நீலப் பைஞ்சுனைப் |
|
| |
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல் |
|
| |
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே” (5: 48-50) |
|
|
எனவரும் பரிபாடலானும் உணர்க. முருகன் சீவகனுக்கு உவமை.
|
( 144 ) |
| 995 |
கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா |
| |
முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா |
| |
விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா |
| |
லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. |
|
|
(இ - ள்.) வெஞ்சரம் ஐந்து உடையான் - கொடிய அம்புகள் ஐந்தினையும் உடையானாகிய காமன்; முலைத்தடத்திடை மொய் எருக் குப்பைஆ - என் முலைத்தடங்களின் நடுவிடம் நெருங்கிய எருக் குவியலாகவும்; என உயிர் இலக்கம்ஆ - என் உயிர் குறியாகவும்; எய்து அலைக்கும் - அடித்து வருத்தும்; (ஆதலால்); கல்லூரி நல் கொட்டில் - கல்லூரியையுடைய விற்பயிற்சி செய்யும் இடத்திலே; கலத்தற் காலம்ஆ கற்கும் - விற்பயிற்சி தொடங்கும் காலமாக எண்ணிக் கற்குந் தொழிலை நடத்துகின்றான்.
|
|
|
(வி - ம்.) கற்பார் எருவிலும் இலக்கிலும் எய்து கற்பர். இது 'மடந்தப உரைத்தல்' என்னும் மெய்ப்பாடு; அறிவு மடம் நீங்கிக் காமப் பொருட்கண்ணே அறிவு தோன்ற நிற்றலின் (தொல். மெய்ப். 19-பேர்)
|
( 145 ) |
| 996 |
பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் |
| |
வேமெ னெஞ்சமும் வேள்வி முளரிபோல் |
| |
தாம மார்பனைச் சீவக சாமியைக் |
| |
காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். |
|