பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 577 

   (வி - ம்.) யாழ்வென்று கொண்ட தத்தையை விரும்பினவன் என்னுங் கருத்துப்பட 'வீணை வித்தகன்' என்றார்.

 

   பொன்னனாள் : குணமாலை. குலம் : ஆகுபெயர் ஒழுக்கம் என்க. நலம் - பெண்மை நலம். காணிய : செய்யியவென் வாய்பாட்டு வினையெச்சம். ஆணு - நட்பு. ஆண்டு - அச் சீவகனிடத்து.

( 152 )

வேறு

 
1003 கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
றீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல்
வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர்
நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே.

   (இ - ள்.) மணிபல தெளித்துக் கூட்டினாள் - பல மணிகளையும் கரைத்துக் கூட்டினான்; கொண்டவன் கிழிமிசைத் திலகவாணுதல் - கூட்டியவன் படத்தின் மேல், திலகம் அணிந்த ஒள்ளிய நெற்றியாளை; வேட்ட மால் களிற்றிடை வெருவி நின்றது - தான் விரும்பிய, பெரிய களிற்றின் முன்னர் அஞ்சி நின்றதாகிய; ஓர் நாட்டமும் நடுக்கமும் - ஒரு நோக்கமும் நடுக்கமும் ; நங்கை வண்ணமே - குணமாலையின் இயலாகவே எழுதினான்.

 

   (வி - ம்.) 'நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்ளி - அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள்' (சீவக. 1024) என்பன் பின்னும்.

 

   இது முதல் மூன்று செய்யுட்கும் 1006 ஆம் செய்யுளின்கண் உள்ள இறைமகன் என்பதை எழுவாயாகக் கொள்க. இறைமகன்: சீவகன். தெளித்தல் ஈண்டுக் கரைத்தல் என்னும் பொருட்டு. கிழி - படாம்.

 

   குணமாலை களிற்றின்முன் அஞ்சி நடுங்கி அலமந்து நோக்கிய பொழுது தோன்றிய தோற்றத்தை ஓவியமாகத் தீட்டினன் என்பது கருத்து.

( 153 )
1004 நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே
மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடு
முகிழ்ந்து வீங் கிளமுலை முத்தந் தைவரும்
புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மென்பவே.

   (இ - ள்.) நெகிழ்ந்து வீழ் பூந்துகில் நோக்கி நோக்கியே - நெகிழ்ந்து விழும் அழகிய துகிலினை மனத்தாற் குறித்துப் பார்த்துக் கண்ணாலும் பார்த்து; மகிழ்ந்து - களித்து; வீழ் மணிக்குழல் மாலைகால் தொடும் - வீழும் கருங் குழலையும் மாலையையும் காலையும் திருத்தத் தொடுவான்; முகிழ்ந்து வீங்கு இளமுலை முத்தம் தைவரும் - அரும்பிப் பருத்த இளமுலைமேல் முத்துக்