| குணமாலையார் இலம்பகம் |
581 |
|
|
(வி - ம்.) மாலையைக்கொண்ட பூஞ்சிகைக்குப் பூங்கொடியின் மேல் குனிந்திருந்த குயில் உவமை.
|
( 161 ) |
| 1012 |
சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம் |
| |
அலங்கலுண் டியாழ்செயும் அம்பொன் பூங்கெடி |
| |
நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் |
| |
விலங்கரித் தடங்கணாள் யாவள் ஆங்கொலோ. |
|
|
(இ - ள்.) தேன் இனம் அலங்கல் உண்டு யாழ்செயும் அம்பொன் பூங்கொடி - வண்டுகளின் இனம் மாலையில் தேனைப் பருகி யாழென முரலும் அழகிய பொன்னாலான பூங்கொடி ஒன்று; சிலம்பொடு மேகலை மிழற்ற - சிலம்பும் மேகலையும் ஒலிக்க; நலம்பட நல்நடை கற்றது ஒக்கும் - நலம்பெற நல்ல நடையைக் கற்றது போன்ற; இவ் இலங்கு அரித்தடங்கணாள் யாவள்? - இந்த விளங்கும் செவ்வரி பரந்த பெருங்கண்ணாள் யாவளோ?
|
|
|
(வி - ம்.) இல்பொருளுவமை.
|
|
|
மிழற்ற - ஒலிப்ப. தேனினம் - வண்டினம். அலங்கல்: ஆகுபெயர்; தேன் என்க. யாழ் - இசைக்கு ஆகுபெயர்.
|
( 162 ) |
| 1013 |
யாவளே ஆயினும் ஆக மற்றிவள் |
| |
மேவிய பொருளொடு மீண்ட பின்னலால் |
| |
ஏவலாற் சோ்கலேன் என்று பைங்கிளி |
| |
பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே. |
|
|
(இ - ள்.) யாவளே ஆயினும் ஆக - (இவள்) எவளாக இருப்பினும் இருக்க; இவள் மேவிய பொருளொடு மீண்டபின் அலால் - இவள் தான் விரும்பியது முடிந்து திரும்பின பின்னர் அன்றி; ஏவலால் சேர்கலேன் என்று - குணமாலையின் ஏவலாற் செல்லக் கடவன் அல்லேன் என்றுன்னி; பைங்கிளி பூ அலர் சண்பகம் பொருந்திற்று - அப் பச்சைக்கிளி மலர்ந்த சண்பகத்தைச் சார்ந்து தங்கியது.
|
|
|
(வி - ம்.) ஏவலான் - ஏவில் வல்லவன்( சீவகன்) எனினும் ஆம்.
|
|
|
இவள் என்றது காந்தருவதத்தையை. மேவிய பொருள் - தான் விரும்பிவந்த செயல். சேர்கலேன்: தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று.
|
( 163 ) |
| 1014 |
மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி |
| |
யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் |
| |
கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் |
| |
புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். |
|