| குணமாலையார் இலம்பகம் |
582 |
|
|
(இ - ள்.) மதுக்களி நெடுங்கணாள் - கள்ளின் களிப்பைத் தன்னிடத்தே கொண்ட நீண்ட கண்ணினாள்; வான்பொன் கிண்கிணி ஒதுக்கிடை மிழற்றச் சென்று எய்தி - உயர்ந்த பொற்கிண்கிணி நடையிலே ஒலிப்பப் போய் நெருங்கி; ஊன்கவர் கதக்களி வேலினான் கண்டு - ஊனைக் கவரும் சீற்றத்துக்கும், வெற்றிக் களிப்புக்கும் உரிய வேலினானைக் கண்டு; காமநீர்ப் புதுத்தளிர் அனையவள் புலந்து நோக்கினாள் - காம நீரிலே தோன்றும் புதிய தளிரைப் போன்று (நடுங்கி) ஊடியவளாய் அப் படத்தைக் குறித்துப் பார்த்தாள்.
|
|
|
(வி - ம்.) 'கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று' (பதிற்றுப் பத்து- 52) என்பது காண்க. 'காமத்தாற் புலந்து' என்றும் கூட்டலா மென்பர் நச்சினார்க்கினியர்.
|
( 164 ) |
| 1015 |
இதுவென வுருவென வியக்கி யென்றலும் |
| |
புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலான் |
| |
மதுவிரி கோதையம் மாலை நின்மன |
| |
மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. |
|
|
(இ - ள்.) இது என உரு என - (பார்த்தவள்) இஃது என்ன உருவம் என்று வினவ; இயக்கி என்றலும் - (சீவகன்) இயக்கியின் உருவம் என்றவுடன்; பூந்துகில் குழல்கள் சோர்தலால் புதிது இது - பூந்துகிலும் குழலும் சோர எழுதுவதால் புதியதே இப் படம் (நீ கூறியது பொய்யன்று); மதுவிரி கோதை அம்மாலை நின்மனம் அது - தேன்மிகுங் கோதையாளாகிய அக்குணமாலை நின் உள்ளமாகிய அதனை; முறை இயக்கலின் இயக்கி ஆகும் - முறையே ஆற்றாமை மிக இயக்குவதால் இயக்கி ஆவாள்.
|
|
|
(வி - ம்.) இயக்கி தெய்வமாதலின் 'இது' என்றாள்.
|
|
|
அம்மாலை - அக்குணமாலை.
|
( 165 ) |
| 1016 |
முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென |
| |
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெஞ்சிலை |
| |
வளைத்தன புருவமு முரிந்த வல்லையே |
| |
கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. |
|
|
(இ - ள்.) முளைத்து எழு மதியம் ஆங்கு முத்து அரும்பியது என - கிழக்கே முளைத்தெழுந்த திங்கள் ஆங்கே முத்துக்களை அரும்பிய தென்னுமாறு; திருமுகம் வியர்ப்பு விளைத்து - (அவள்) அழகிய முகம் வியர்வை பொடித்தது; வெஞ்சிலை வளைத்தஅன புருவமும் முரிந்த - கொடிய விற்களை வளைத்தால்
|
|