பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 583 

அன்ன புருவங்களும் நெற்றியிலேறி வலலையே வளைந்தன; கிளைக் கழுநீர்க்கணும் சிவப்பின் கேழ்த்த - விரைவாகவே அலர்ந்த பூவிற்குக் கிளையாகிய கழுநீரின் (நீர்க்கீழ் அரும்பினும்) கண்கள் சிவப்புற்றன.

 

   (வி - ம்.) 'வல்லையே' என்பதனைத் திருமுகத்தின் வியர்ப்புக்கே கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

 

   கிளைக்கழுநீர் - நீர்க்கீழரும்பு. கணும் - கண்ணும். கண்ணும் கிளைக் கழுநீர்ச் சிவப்பிற் கேழ்த்த என மாறுக. ”கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு” (29) என்றார் திருமுருகாற்றுப் படையினும். அலர்ந்த பூவினும் இவ்வரும்பு இதழ் மிக்குச் சிவப்புடையதாதல் பற்றி இங்ஙனம் கூறினர்.

( 166 )
1017 பாவைநீ புலவியி னீடல் பாவியேற்
காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க்
கூவல்வாய் வெண்மணல் குறுகல் செல்லுமே
மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே.

   (இ - ள்.) பாவை ! நீ புலவியில் நீடல் - பாவையே! நீ புலவியிலே காலம் நீட்டிக்காதே; இரண்டு உடம்பு அல்லது பாவியேற்கு ஆவி ஒன்று - நம் மிருவர்க்கும் இரண்டும் உடம்பே அல்லாமல், பாவியேனுக்கு உயிர் ஒன்றாக (நின்னுயிரே என்னுயிராக) இருக்கும். (இது நம் இயல்பு) ; பூங்கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - பூமலிந்த கங்கையை விரும்பி அடைந்த அன்னம் ; வெண்மணல் ஊற்றுநீர்க் கூவல் வாய்குறுகல் செல்லுமே? - வெள்ளிய மணலின்கண் ஊறும் ஊற்று நீரையுடைய கிணற்றிலே நெருங்கிச் செல்லுமோ?

 

   (வி - ம்.) கூவலிற் செல்லாதெனவே, கங்கையை நிகர்க்கும்யாற்றிலே செல்லும் என்பதாயிற்று; எனவே, குணமாலை மரபுங்கூறி அவளை வரைதலும் முறைமை யென்று கூறினானாம்.

( 167 )
1018 பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்
நோ்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி
கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே
யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே.

   (இ - ள்.) பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள் - வேறொரு பெண்டிரின் பேருரைப்பினும் பொறாமற் சீறும் தத்தை; மலர்ப் பாவையை நேர் நோக்கி - திருமகளைப் போன்றாளை எதிர்முகமாக நோக்கியபோது (அவள் வடிவு மிகுதி கண்டு); ஆர்வுறு கணவன்மாட்டு அமிர்தின் சாயற்கு - விருப்பம் மிகுந்த கணவனிடத்திலே அமிர்தமனைய மெல்லியலாட்கு; நெய்