பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 584 

சொரிகூர் அழல்போல்வது ஓர் புலவி கூர்ந்தது - நெய் பெய்தலாலே மிகுந்தெரியும் அழலைப் போல்வதாகிய ஊடல் மிக்கது.

 

   (வி - ம்.) 'நேரமர்ப் பாவையை நோக்கி' என்பது பாடமாயின், 'தனக்கு மாறாகிய பாவையை நேரே நோக்கி' என்க.

 

   பேரினும் என்றது, வேறொரு பெண்ணின் பெயர் சொல்லுமளவிற்கே என்பதுபட நின்றது. மலர்ப்பாவை - திருமகளை ஒத்த குணமாலை என்க. என்றது அவள் உருவப் படத்தை. கூரழல் : வினைத்தொகை. ஆர்வு - ஆர்வம். அமிர்தின்சாயல் : காந்தருவதத்தை.

( 168 )
1019 புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச்
சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே
லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல
மிலங்கப்போ்ந் தினமலர் சிதறி யேகினாள்.

   (இ - ள்.) புலந்தவள் கொடிஎன நடுங்கி - இவ்வாறு பிணங்கினவள் மலர்க்கொடிபோல நடுங்கி : சென்னிமேல் அலங்கல் வாய் - அவன் முடிமேல் மாலையிடத்தே; பொன் அரிச் சிலம்பொடு மேகலை மிழற்ற - பொற்சிலம்பும் மேகலையும் மெல்லென ஒலிக்கும்படி; அடிமலர் அணிந்து - தன் அடியாகிய மலரைச் சூட்டி; குண்டலம் இலங்கப் பேர்ந்து - குண்டலம் ஒளிவிட அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; இனமலர் சிதறி ஏகினாள் - பின்னர் இனமலர்களைச் சிந்திவிட்டுத் தன் மனைக்குச் சென்றாள்.

 

   (வி - ம்.) இச் செய்யுளில் சென்னிமேல் அடிமலர் அணிந்து என்றது, அவள் புலவி தணித்தற்கு அவள் அடிகளில் வணங்கிய சீவகனுடைய சென்னிமேல் என்பதுபட நின்றது. இனமலர் - தொகுதியான மலர்.

( 169 )
1020 துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு
மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக்
கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன்
பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சோ்ந்ததே.

   (இ - ள்.) துனிப்பு உறுகிளவியால் - அவன் கூறிய வெறுப்பூட்டும் வார்த்தையுடனே; துணைவி ஏகலும் - தத்தை போனவுடன்; இனி பிறர்க்கு இடம் இலை - (அவள் ஊடல் நீங்காது போதலின்) இனி வேறொருவர்க்கு இங்கே இடம் இல்லை; ஈங்கு எழுவல் எனா - இங்கு நின்றும் எழுவேன் என்று; கனிப்பு உறுசொல் அளைஇ-இனிமையான மொழிகளைத் தன்னிலே இயம்பிக் கொண்டு; பறந்து - பறந்து சென்று; காளைதன் பனிக்கதிர்ப்