| குணமாலையார் இலம்பகம் |
585 |
|
|
பகை மலர்ப் பாதம் சேர்ந்தது - சீவகனுடைய தண்ணிய நிலவின் பகையான தாமரை மலரனைய அடிகளை வணங்கியது.
|
|
|
(வி - ம்.) அளைஇ: சொல்லிசை அளபெடை.
|
|
|
துனிப்பு - வெறுப்பு. துணைவி : காந்தருவதத்தை. ஈங்குப் பிறர்க்கிடமிலை என மாறுக. கனிப்பு - இனிமை. பனிக்கதிர்ப்பகை - தாமரை மலர்.
|
( 170 ) |
| 1021 |
வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே |
| |
தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் |
| |
சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட |
| |
யாழறி வித்தக னங்கை நீட்டினான். |
|
|
(இ - ள்.) மைந்த ! நின் கழலடி வாழ்க என்ன - மைந்தனே ! நின் கழலணிந்த அடி வாழ்வதாக! என்று வணங்கிய கிளி வாழ்த்த ; யாழ் அறி வித்தகன் - யாழ் உணர்ந்த திறலோன்; தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என - எம் தோழியரின் நல்வரவே! இங்கு வருக என்று கூறி ; சூழ்மணி மோதிரம் சுடர்ந்து வில்இட அங்கை நீட்டினான் - விரலைச் சூழ்ந்த மணியாழி சுடர்விட்டு ஒளிவீச அங்கையை நீட்டினான்.
|
|
|
(வி - ம்.) அடி வாழ்க என்றல் முறைமை. குணமாலையையும் சுரமஞ்சரியையும் குறித்துத் தோழியர் என்றான். 'தோழியர் சுவாகதம்' எனப் பாடம் ஓதி, 'வியந்து' தோழி சுகமே வந்ததே என்றுமாம்.
|
|
|
மைந்தன் நின் கழலடி வாழ்க என மாறுக. சுவாகதம் என்ற சொல்லிற்கு நல்வரவு என்றும் கிளி என்றும் பொருளுண்டு.
|
( 171 ) |
| 1022 |
பொன்னிய குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் |
| |
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி |
| |
முன்னமே வந்தென முறுவல் நோக்கமோ |
| |
டென்னைகொல் வரவென வினிய செப்பினான். |
|
|
(இ - ள்.) பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம்முலைக் கன்னியர் தூதொடு - பொன்னாலியன்ற குரும்பைபோல விளங்கும் வெம்முலைக் கன்னியரின் தூதாக; காமர் பைங்கிளி முன்னமே வந்தென - அழகிய பச்சைக்கிளி என் முன்னரே வந்தது என்றெண்ணி; முறுவல் நோக்கமொடு - நகைமுகப் பார்வையுடன்; வரவு என்னைகொல் என - வரவு எதனைக் கருதியோ என்று; இனிய செப்பினான் - இனிய மொழிகளை இயம்பினான்.
|
|
|
(வி - ம்.) என் முன்னமே என்றான், பின்பும், 'ஆற்றாதேன் ஆற்ற, விடுந்த சிறுகிளி' (சீவக. 1041) என்கின்றமையின். 'வந்ததென' என்பது 'வந்தென' என விகாரப்பட்டது.
|
( 172 ) |