| குணமாலையார் இலம்பகம் |
586 |
|
| 1023 |
மையலங் களிற்றொடு பொருத வண்புக |
| |
ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப் |
| |
பையர வல்குலெம் பாவை தூதொடு |
| |
கையிலங் கெஃகினாய் காண வந்ததே. |
|
|
(இ - ள்.) கை இலங்கு எஃகினாய் - கையில் விளங்கும் வேலோனே!; மையல்அம் களிற்றொடு பொருத வண்புகழ் ஐயனை - மயக்கங்கொண்ட யானையுடன் போர்செய்த வளமிகு புகழுடைய ஐயனை; கண்டு செவ்வி அறிந்து வம்என - பார்த்து நிலை அறிந்து வருக என்று சொல்லிய; பை அரவு அல்குல் எம்பார்வை தூதொடு - படமுடைய பாம்பனைய அல்குலையுடைய எம் பாவையின் தூது மொழியுடனே; காண வந்தது - நின் செவ்விகாணவே என் வரவு நேர்ந்தது.
|
|
|
(வி - ம்.) செவ்வி அறிதல் - வேட்கையுண்டில்லை யென்றறிதல்.
|
|
|
மையல் அங்களிறு - மயங்கிய அழகிய அசனிவேகம். வம்: ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. பாவை : குணமாலை. எம்பாவை என்றது எம்மூர் என்றாற்போன்று ஏனைக் கிளிகளையும் உளப்படுத்திக் கூறியபடியாம். என்னை கொல் வரவு என்றதற்கு விடையாகக் காணவந்தது என்று கிளி கூறிற்று. வந்தது காண்டற்கு என்றவாறு.
|
( 173 ) |
வேறு
|
|
| 1024 |
வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக |
| |
நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி |
| |
அஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை |
| |
பைஞ்சிறைத் தத்தை யென்னாப் பசுங்கிளி மொழியும் |
|
|
(இ - ள்.) பைஞ்சிறைத் தத்தை - பசுஞ் சிறகுடைய தத்தையே !; வெஞ்சின வேழட்ம உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக- கொடிய சினமுற்ற வேழம் என்னும் நோயால் உண்ணப்பட்ட விளாம்பழம்போல வெறுவியேம் ஆமாறு; நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி - உள்ளத்தையும் நிறையையும் (பிறர் அறியாமல்) நீண்ட கருங்கண்களாற் கவர்ந்த கள்வி; அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் - கண்ணுக்குத் தீட்டிய மைத்துளியிலே முழுகி (முன்னர் யானையைக் கண்டபோது) நடுங்கினாள் ; நிலைமை என்னை ? என்ன - அவள் நிலை எங்ஙனமுள்ளது? என்று சீவகன் வினவ; பசுங்கிளி மொழியும் - பைங்கிள்ளை மொழியும்.
|
|
|
(வி - ம்.) வேழம், தேரை போயிற்றென்றாற் போல்வதொரு நோயென்க. இனி, யானை யுண்டது வெறுவிதாம் என்றும் உரைப்ப. ஈண்டு 'நாட்டமும் நடுக்கமும்' (1003) வருத்தினமை கூறினான்.
|
|