|
”பாவைதான் கோலத்தையும் பந்தையும் பாராளாய் ஆடலளாய் விளர்த்து யாழையும் உணவையும் விட்டு நீங்கி, உறக்கத்தையும் விட்டாள்; இத்தன்மையே யன்றி உயிரும் நீங்குமோ என்று கருதிப் பூம்படுக்கையாகிய நெருப்பிலே கிடந்து பார்க்கும்; அதினும் உயிர் நீங்காமையின் , தூணைப் பற்றுக்கோடாகப் பொருந்தி நின்றும் பார்க்கும்; வருந்தக் குறிப்புத் தோன்றி ஐயெனக் கூறிப்போய்ப் பல்கால் ஆவித்து நெட்டுயிர்ப்புக் கொள்ளா நிற்கும்; பின்பு அதுவுமின்றி நிலமிசை மெல்ல இருக்கும் ; அங்ஙனமிருந்து, சாயலை உடையாள், 'சீவகசாமி ! வளைகழல அமையுமோ' எனும்; 'நின் உருவம் வெளிப்பட்டதனைப் பல்காலும் சென்று புல்லி, அது தன் எதிர் புல்லாமையின், யான் புல்லி வருந்தினேன்; இனி, நீ தான் வந்து மார்புறும்படி புல்'லென்னும்; அது காணாமையின் ஓ என்று வருந்தும்.”
|
( 177 ) |