பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 589 

யானதால் நெருங்கி மிகவும் அறிகிலேன் ; தோன்றல் ! மாதர் உற்றநோய் நீ துன்னி அறிதியோ என்றது - தோன்றலே ! மாலை உற்ற நோயை நீ பொருந்தி அறிவையோ ? கூறு என்றது.

 

   (வி - ம்.) 'கன்னியர் உற்றநோய் கண்ணனார்க்கும் இன்ன தென்றுரையலர் என்னுமிதனை, ” தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்ப(து) ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா” (சூர்ப்ப - 45) எனவரும் இராமாவதாரத்தோடும் ஒப்பு நோக்குக. மன்னும் - மிகவும். மாதர் : குணமாலை.

( 178 )

வேறு

 
1029 புள்ளின் வாயுரை கேட்டலும் பொன்செய்வே
லௌ்ளி நீண்டகண் ணாடிறத் தின்னுரை
யுள்ளி னாருழைக் கண்டதொத் தானரோ
வள்ளன் மாத்தடிந் தானன்ன மாண்பினான்.

   (இ - ள்.) வள்ளல் மாத்தடிந்தான் அன்ன மாண்பினான் - வள்ளலாகிய மாமரங் கொன்ற முருகனனைய சிறப்பினான் ; புள்ளின் வாய்உரை கேட்டலும் - கிளியின் வாய்மொழியைக் கேட்டவுடன்; பொன் செய்வேல் எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன்உரை - பொன்னாற் செய்யப்பட்ட வேலை இகழ்ந்து நீண்ட கண்களையுடையாளிடமிருந்து வந்த இனிய மொழியை, உள்ளினாருழைக் கண்டது ஒத்தான் - தன்னால் நினைக்கத் தக்காரிடம் கண்டாற்போல மகிழ்ந்தான்.

 

   (வி - ம்.) இன்னுரை : ஆகுபெயராய் இன்னுரை அடங்கிய ஓலையைக் குறிக்கும். இனி, 'கண்ணாள் திறத்தின்னுரையைப் புள்ளின் வாயுரையாகக் கேட்டலும், தான் பெறற்கரியரா நினைத்தவர் தன் எதிரே வரக்கண்டார் போல மகிழ்ந்தான்' என நச்சினார்க்கினியர் கூறுமாறு கொள்ளினும் கொள்க. அன்றி, 'இன்னுரையால்' என உருவு விரித்து, 'உள்ளினார் உழைவரக் கண்டாற் போன்ற மகிழ்வடைந்தா' னெனக் கொள்ளினும் பொருந்தும்.

( 179 )
1030 சென்ம ருந்துதந் தாய்சொல்லு நின்மனத்
தென்ன மர்ந்த துரைத்துக்கொ ணீயென
வின்னி மிர்ந்தநின் வீங்கெழிற் றோளவட்
கின்ம ருந்திவை வேண்டுவ லென்றதே.

   (இ - ள்.) சொல் மருந்து தந்தாய்நீ - குணமாலையின் மொழியாகிய மருந்தினை யான் ஆற்றுமாறு தந்த நீயே; சொல்லும் நின் மனத்து என் அமர்ந்தது - கூறுகின்ற நின் உள்ளத்திற்கு என்ன பொருந்தியதோ; உரைத்துக்கொள் என - அதனைக்