| குணமாலையார் இலம்பகம் |
590 |
|
|
கூறிக்கொள் என்றானாக; வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில்தோள் அவட்கு இன்மருந்து - வில் பொருந்திய, நின்னுடைய பருத்த அழகிய தோள்கள் அவளுக்கு இனிய மருந்தாகும். (அன்றி நின்னைப்போற் சொல் மருந்தால் ஆற்றாள்) ; இவை வேண்டுவல் என்றது - (ஆகவே) இத் தோள்களையே வேண்டுவேன் என்றது.
|
|
|
(வி - ம்.) சொல் மருந்து, குணமாலை சொல்லும் சொல் : அவை, ”திருந்து வேற் சீவகசாமியோ.......வருந்தினேன் மார்புறப் புல்லு வந்து” என்று குணமாலை கூற்றைக் கிளிகொண்டு கூறப்பட்டவை என்க. அச்சொற்களே இனி அவளை யாம் எய்துதல் ஒருதலை என்று தெளிவித்துத் துயரகற்றலின் மருந்து என்றான். இன் மருந்து இவை என்றது நின்போன்று அவள்சொன்மருந்தான் ஆற்றுகிலாள் என்பது படநின்றது.
|
( 180 ) |
| 1031 |
பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூழ் |
| |
நெற்குன் றாம்பதி நேரினுந் தன்னையான் |
| |
கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீ இச் |
| |
சொற்குன் றாபுணர் கேன்சொல்லு போவென்றான். |
|
|
(இ - ள்.) பொற்குன்று ஆயினும் பூம்பழனங்கள் சூழ் நெற்குன்று ஆம்பதி நேரினும் - (அவள் சுற்றத்தார் வேண்டுவன) பொன்மலை யெனினும், அழகிய பழனங்கள் சூழ்ந்த, நெற்குன்றுகளையுடைய நகரமே எனினும்; தன்னை யான் கற்குன்று ஏந்திய தோளிணை கண் உறீஇப் புணர்கேன் - (அவற்றைக் கொடுத்து) அவளை நான் கற்குன்றுபோல் நிமிர்ந்த என் இரு தோளினும் அணைத்துத் தழுவிக்கொள்வேன்; சொல் குன்றா - இச் சொற்கள் குன்றமாட்டா; போ, சொல்லு என்றான் - போய்க் கூறு என்றான்.
|
|
|
(வி - ம்.) 'கற்குன் றேந்திய தோள்' 'கொடுஞ்சிலையான்' (சீவக. 1041)என்று தன்னை வியத்தல் குற்றமெனின், 'கிழவி முன்னர்த்தற்புகழ் கிளவி - கிழவோன் வினைவயின் உரிய என்ப' (தொல். கற்பு. 40) என்பதன் கருத்தாற் குற்றம் அன்று. வினை - செயப்படுபொருள். பொருளும் ஊரும் கெர்டுத்துப் புல்லுவேன் என்னுங் கடைப்பிடியாகிய செயப்படு பொருளும், முயற்சிக்குச் சிறப்புடைமையின், யானே புணர்வேன் என்னும் ஆள்வினைக் கருத்தால் தன்னைப் புகழ்ந்துரைக்கவே அது பற்றுக்கோடாக ஆற்றுவாள் என்பது பயனாம். இது, கைக்கிளையாதலின், முன்னிலை யன்றியும் புகழ்ந்தான்; புறத்திணை ஆயின், 'தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்' (தொல். புறத்திணை. 5) தலைவற்குரித்து.
|
( 181 ) |
| 1032 |
சேலை வென்றகண் ணாட்கிவை செப்பரி |
| |
தோலை யொன்றெழு திப்பணி நீயென |
| |
மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குர |
| |
லோலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே. |
|